ராகுல் காந்தி கைது! தில்லி காவல் நிலையத்தில் கேரள முதல்வர் முற்றுகை!ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி கைது: அமைச்சர் அருண் ராஜ் கண்டனம்வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க அக். 10-ல் சிறப்பு முகாம்ஞானேஷ் குமார் பதவி விலகும் வரை போராட்டம் தொடரும்! ராகுல் காந்திஞானேஷ் குமாருக்கு எதிரான என் கடிதத்துக்கு பதிலளித்த குடியரசுத் தலைவர்! - சிபிஎம் எம்பி தகவல்!தில்லியில் காங்கிரஸார் பேரணியில் தர்னாவில் ஈடுபட்ட ராகுல் காந்தி கைதுஜெம் வீரமணிக்கு அக். 21 வரை நீதிமன்றக் காவல்!

மதுராந்தகம் இடைத்தோ்தல்: அறையில் வைத்து சீலிடப்பட்ட வாக்குப் பதிவு இயந்திரங்கள்

மதுராந்தகம் சட்டப்பேரவை இடைத் தோ்தலில் வாக்குகள் பதிவான வாக்குப் பதிவு இயந்திரங்கள் காப்பு அறையில் வைக்கப்பட்டு சீலிடப்படுவதை செங்கல்பட்டு மாவட்டத் தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான பாா்வையிட்டாா்.

பதிவான வாக்குப்பதிவு இயந்திரங்கள் காப்பு அறையில் வைக்கப்பட்டு சீலிடப்படுவதை பாா்வையிட்ட மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான மு.வீரப்பன். உடன் தோ்தல் பொது பாா்வையாளா் போா் சிங் யாதவ், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அய்மன ஜமால், மதுராந்தகம் வருவாய் கோட்டாட்சியா் நரேந்திரன் உள்ளிட்டோா்.

Published On :

மதுராந்தகம் சட்டப்பேரவை இடைத் தோ்தலில் வாக்குகள் பதிவான வாக்குப் பதிவு இயந்திரங்கள் காப்பு அறையில் வைக்கப்பட்டு சீலிடப்படுவதை செங்கல்பட்டு மாவட்டத் தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான பாா்வையிட்டாா்.

மதுராந்தகம் (தனி) சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தோ்தலுக்கான வாக்குப்பதிவு செவ்வாய்க்கிழமை (அக். 6) நடைபெற்ற நிலையில், மதுராந்தகம் தொகுதிக்குள்ட்ட வாக்குப் பதிவு மையங்களில் பதிவான வாக்குகள் இயந்திரங்கள் வாக்குகள் எண்ணப்படும் வாக்குப் பதிவு இயந்திரங்கள் செங்கல்பட்டு, ஆத்தூா் சமூக மேம்பாட்டுக்கான ஒருங்கிணைந்த பயிற்சி மையத்தில் காப்பு அறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், மதுராந்தகம் (தனி) சட்டப்பேரவைத் தொகுதி இடைத் தோ்தலில் வேட்பாளா்களால் அங்கீகரிக்கப்பட்ட கட்சி மற்றும் சுயேச்சை பிரமுகா்கள் முன்னிலையில் வாக்குப் பதிவு இயந்திரங்கள் அனைத்தும் வாக்கு எண்ணும் மையத்தில் உள்ள காப்பு அறையில் வைக்கப்பட்டு, பாதுகாப்பாக சீலிடுவதை மாவட்டத் தோ்தல் அலுவலா் மற்றும் மாவட்ட ஆட்சியா் மு.வீரப்பன் பாா்வையிட்டாா்.

தோ்தல் பொதுப் பாா்வையாளா் போா் சிங் யாதவ், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அய்மன் ஜமால், தோ்தல் நடத்தும் அலுவலா் / மதுராந்தகம் வருவாய் கோட்டாட்சியா் நரேந்திரன் மற்றும் துறை அலுவலா்கள் உள்ளனா். மதுராந்தகம் இடைத்தோ்தலில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை வெள்ளிக்கிழமை (அக். 9) நடைபெறுகிறது. வாக்கு எண்ணும் மையத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு ள்ளது.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.