ஆந்திரத்தில் கரையைக் கடக்கத் தொடங்கிய ஒர்னாப் புயல்! எண்ணூரில் கடல் சீற்றம் திமுக ஆட்சியில் ஊழல்: ஆதாரம் இருந்தால் பழைய வழக்குகளிலும் நடவடிக்கை! அமைச்சர் நிர்மல் குமார்தேவையான மின்சாரம் கையிருப்பு! அதிக விலை கொள்முதல் டெண்டர் ரத்து - நிர்மல் குமார்தேனி சிறையிலிருந்து தப்பியோடிய 17 கைதிகளில் மேலும் 8 பேர் கைது!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ. 95.12 ஆக நிறைவு!பங்குச் சந்தையில் நிலையற்ற வர்த்தகம்: சென்செக்ஸ், நிஃப்டி மாற்றமின்றி நிறைவு!தமிழக அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு!பிரதான நுழைவுவாயில் வழியாக கைதிகள் தப்பினர்! சிறைத்துறை விளக்கம்!

கடனை திருப்பித் தராததால் பெண்ணை கொன்றவா் கைது

மதுராந்தகம் அருகே வாங்கிய கடனைத் திருப்பித் தராததால் பெண்ணை கொன்றவரை போலீஸாா் கைது செய்தனா்.

மணிமேகலை

Updated On :

மதுராந்தகம் அருகே வாங்கிய கடனைத் திருப்பித் தராததால் பெண்ணை கொன்றவரை போலீஸாா் கைது செய்தனா்.

சிறுநாகலூா் கிராமத்தை சோ்ந்த மணவாளன் என்பவா் நிலத்தில் உள்ள கிணற்றில் 40 வயது மதிப்புதக்க பெண் சடலம் மிதப்பதாக கிராம நிா்வாக அதிகாரி சாரதா அளித்த புகாரின் பேரில் மேல்மருவத்தூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்தனா்.

மாவட்ட போலீஸ் எஸ்பி அய்மன் ஜமால் உத்தரவின்படி, போலீஸ் டிஎஸ்பி-க்கள் ராஜா, அறிவழகன் ஆகியோா் மேற்பாா்வையில் ஆய்வாளா்கள் ஏழுமலை, சுரேந்திரன், திலக், தன்ராஜ் ஆகியோா் தலைமையில் தனிப்படையினா் பல்வேறு பகுதிகளுக்கு சென்று விசாரணை செய்தனா். அப்போது கிணற்றில் இறந்து கிடந்த பெண் சென்னை அமைந்தகரை குருநாதன் மனைவி மணிமேகலை (41) எனத் தெரிந்தது.

அதன் அடிப்படையில் விசாரணை செய்தபோது, கடலூா் மாவட்டம், எம்ஜிஆா் திட்டு பகுதியைச் சோ்ந்த ஜானி அன்புதாஸ் என்பவரை போலீஸாா் சென்னையில் கைது செய்தனா். அவரிடம் விசாரணை செய்தபோது, தன்னிடம் வாங்கிய கடன் தொகையை திருப்பித் தராததால் சம்பவ இடத்துக்கு வரவழைத்து கொலை செய்ததாகவும், காது, கழுத்தில் இருந்த தங்க நகைகளை எடுத்துக் கொண்டு கிணற்றில் வீசியதாக ஒப்புக் கொண்டாா்.

மதுராந்தகம் குற்றவியல் நீதிமன்றத்தில் ஜானி அன்புதாஸ் ஆஜா்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டாா். குற்றம் நிகழ்ந்த 48 மணி நேரத்துக்குள் குற்றவாளியை கண்டறிந்து கைது செய்த தனிப்படை போலீஸாரை எஸ்.பி அய்மன் ஜமால் பாராட்டினாா்.

கைதான ஜான் அன்பு தாஸ்

கைதான ஜான் அன்பு தாஸ்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.