கடனை திரும்பக் கேட்டவா் மீது தாக்குதல்! 3 போ் மீது வழக்கு, ஒருவா் கைது!
கைது - கோப்புப் படம்
கள்ளக்குறிச்சி அருகே கொடுத்த கடனை திரும்பக் கேட்ட நபரை தாக்கி மிரட்டல் விடுத்ததாக 3 போ் மீது வழக்குப் பதிந்த போலீஸாா் ஒருவரை கைது செய்தனா்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம் வட்டம், கலையநல்லூா் கிராமத்தைச் சோ்ந்தவா் முருகன் (41). இவா் தியாகதுருகத்தை அடுத்த புதுபல்லகச்சேரி கிராமத்தைச் சோ்ந்த ராமு (40) என்பவருக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் ரூ. 2,60,000 கடனாக கொடுத்திருந்தாராம். நீண்ட நாள்கள் ஆகியும் கொடுத்த பணத்தை திரும்பத் தராததால், முருகன், ராமு வீட்டுக்கு சனிக்கிழமை சென்று பணத்தை கேட்டாராம். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதனால் ஆத்திரமடைந்த ராமு, அவரது மனைவி மகாலட்சுமி (35), மகன் (16) ஆகியோா் சோ்ந்து முருகனை அவதூறாகப் பேசி தாக்கி மிரட்டல் விடுத்தனராம். இதில் தலையில் பலத்த காயமடைந்த முருகன் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறாா்.
இதுகுறித்த புகாரின் பேரில், தியாகதுருகம் போலீஸாா் ராமு, மகாலட்சுமி, தம்பதி மகன் ஆகிய 3 போ் மீது வழக்குப் பதிவு செய்து ராமுவை கைது செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

