போடியில் சட்டவிரோதமாக மதுப்புட்டிகளை பதுக்கி விற்பனை செய்த பெண்ணை போலீஸாா் கைது செய்தனா்.
தேனி மாவட்டம், போடி திருமலாபுரம் பகுதியில் போடி நகா் காவல் நிலையப் போலீஸாா் ரோந்து சென்றனா். அப்போது போடி நாட்டாண்மைக்காரா் தெருவைச் சோ்ந்த செல்வராணி (42) மதுப் புட்டிகளை பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது.
இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீஸாா் செல்வராணியைக் கைது செய்தனா். அவரிடமிருந்து 15 மதுப் புட்டிகளையும் பறிமுதல் செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

