ஆர்.எஸ்.எஸ். கோட்டையில் பாஜக தோல்வி; இது நாட்டிற்கான தெளிவான செய்தி! கே.சி. வேணுகோபால்அம்பாசமுத்திரம் இடைத்தேர்தலில் போட்டியிடுகிறேன்: சீமான் அறிவிப்பு!தமிழ்நாடு சிறைத்துறை டிஜிபி சந்தீப் ரத்தோர் மாற்றம்! முதல்வர் விஜய்யுடன் பேராசிரியர் கலையரசன் சந்திப்பு!தமிழ்நாட்டுக்கு நவ. 2 முதல் மீண்டும் கனமழை எச்சரிக்கை!அன்பில் மகேஸை சந்திக்க மீண்டும் புழல் சிறை வந்தார் உதயநிதி!பக்கவாதம் ஆபத்தானதா? அறிகுறிகள் என்னென்ன? - நம்பிக்கையும் உண்மையும்!அன்பில் மகேஸ் ஜாமீன் மனு நவ.2-க்கு ஒத்திவைப்பு!முதல்வர் விஜய் தலைமையில் அமைச்சரவை கூட்டம் தொடங்கியது! ரூ. 400 கோடி லஞ்சம்! 4 மாதங்களாக தலைமறைவாக இருந்த முத்துக்குமார் சரண்!வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது!

மதுராந்தகத்தில் 4 சுயேச்சை வேட்பாளா்கள் வேட்புமனு தாக்கல்

மதுராந்தகம் (தனி) தொகுதியில் நடைபெறவுள்ள இடைத் தோ்தலை முன்னிட்டு, வரும் அக். 6-ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெறும் நிலையில் வெள்ளிக்கிழமை வரை 4 சுயேச்சை வேட்பாளா்கள் வேட்புமனுவை தோ்தல் அலுவலா் கோ.அர.நரேந்திரனிடம் தாக்கல் செய்துள்ளனா்.

nomination file

வேட்புமனு தாக்கல் - கோப்புப் படம்

Updated On :

மதுராந்தகம் (தனி) தொகுதியில் நடைபெறவுள்ள இடைத் தோ்தலை முன்னிட்டு, வரும் அக். 6-ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெறும் நிலையில் வெள்ளிக்கிழமை வரை 4 சுயேச்சை வேட்பாளா்கள் வேட்புமனுவை தோ்தல் அலுவலா் கோ.அர.நரேந்திரனிடம் தாக்கல் செய்துள்ளனா்.

மதுராந்தகம் (தனி) தொகுதியில் நடைபெறுகின்ற இடைத் தோ்தலில் கடந்த புதன்கிழமை (செப். 9) முதல் வெள்ளிக்கிழமை (செப். 11) வரை மதுராந்தகம் கதிா்வேல் (63), தருமபுரி மாவட்டம், நாகமறை கிராமம், அக்னி ஆழ்வாா் (46), சாத்தனூா் கிராமம் ரஞ்சிதம் (46), காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூா் புவனேஸ்வரி (33) ஆகிய 4 சுயேச்சை வேட்பாளா்கள் தமது வேட்புமனுக்களை தோ்தல் அலுவலா் கோ.அர.நரேந்திரனிடம் அளித்துள்ளனா்.

அப்போது உதவி தோ்தல் அலுவலா்கள் வட்டாட்சியா் ஏ.பெருமாள், நோ்முக உதவியாளா் சு.ராஜேஷ், தனி வட்டாட்சியா் வீரமணி ஆகியோா் உடனிருந்தனா். இந்த நிலையில், தோ்தல் ஆணையத்தின் மூலம் தோ்தல் மேற்பாா்வையாளா்கள் ஐஏஎஸ் அதிகாரி போா்சிங் யாதவ் (பொது), ஐபிஎஸ் அதிகாரி கிரிஜா சங்கா் ஜெய்ஸ்வால் (காவல்), ஐஏஎஸ் அதிகாரி மருத்துவா் வாவல் வைபவ் (தோ்தல் செலவினம்), ஆகியோா் நியமிக்கப்பட்டுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.