உதாரணமாக, 8-ம் வகுப்பு கல்வித் தகுதியோடு அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் தோட்டக்கலை கற்பித்தல் உள்ளிட்ட பணிகளுக்காக நியமிக்கப்பட்ட தொழில் ஆசிரியர்கள் பலர் பணிபுரிந்து வருகின்றனர். அவர்களுக்கு மேலவைத் தேர்தலில் ஆசிரியர் தொகுதி பிரதிநிதியை தேர்வு செய்ய வாக்குரிமை உண்டு. ஆனால், முதுகலைப் பட்ட தகுதியோடு பணிபுரியும் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியருக்கு வாக்குரிமை இல்லை. வேண்டுமானால், அவர் பட்டம் பெற்றவர் என்ற முறையில், பட்டதாரி தொகுதி பிரதிநிதியை தேர்வு செய்ய வாக்களிக்கலாம். ஆனால், ஆசிரியர் தொகுதியில் வாக்களிக்க முடியாது. இது எந்த வகையில் நியாயம் என்று தொடக்க, நடுநிலைப் பள்ளி ஆசிரியர்கள் கேட்கின்றனர்.