சென்னை, மார்ச் 22: சுகாதாரத்துக்கு கேடு விளைவிக்கும் குடிநீர் பாக்கெட்டுகளுக்கு சென்னையில் விரைவில் தடை விதிக்கப்படும் எனத் தெரிகிறது.
சென்னையில் இப்போது குடிநீர் தட்டுப்பாடு இல்லை என்ற போதும், இங்கு வசிக்கும் பெரும்பாலானோர் குடிப்பதற்குப் பயன்படுத்துவது தனியார் நிறுவனங்கள் தயாரித்து விற்பனை செய்யும் "கேன்' குடிநீரைத்தான். இதுபோல் வீட்டை விட்டு வெளியில் செல்லும்போது, தாகத்தைப் தணித்துக் கொள்ள சிறிய பாக்கெட்டுகளில் அடைத்து விற்கபடும் குடிநீரைப் பருகுகின்றனர்.
இந்த குடிநீர் பாக்கெட்டுகளும், சில "கேன்' குடிநீர்களும் சுகாதாரமற்ற முறையில் விற்கப்படுவது குறித்து தொடர் செய்திகள் வெளிவந்தபோதும், மக்கள் மனநிலையில் மாற்றம் எதுவும் ஏற்படவில்லை.
மக்களிடம் உள்ள வரவேற்பைப் பயன்படுத்திக் கொண்டு, லாபநோக்கோடு செயல்பட்டு வரும் இந்த நிறுவனங்கள், இப்போது குடிநீரை சுத்திகரிப்பு செய்யாமலேயே விநியோகம் செய்யத் தொடங்கிவிட்டன. இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி சுகாதாரத் துறைக்கும் பல புகார்கள் வந்துள்ளன.
சில மாதங்களுக்கு முன்பு குடிநீர் பாக்கெட்டில் மலக் கழிவுகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு, மாநகராட்சியில் புகார் தெரிவிக்கப்பட்டது. இதனடிப்படையில் நடவடிக்கை மேற்கொண்ட மாநகராட்சி, நகரின் பல பகுதிகளில் விற்பனை செய்யப்பட்ட சுகாதாரமற்ற குடிநீர் பாக்கெட்டுகளைப் பறிமுதல் செய்து அழித்தது.
இந்தச் சோதனையின்போது, உரிமம் பெறாமல் பல நிறுவனங்கள் செயல்படுவது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றுக்கு "சீல்' வைத்த மாநகராட்சி, அந்த நிறுவனங்களின் வாட்டர் பாக்கெட்டுகளைப் பயன்படுத்த வேண்டாம் எனவும் அறிவுறுத்தியது.
ஆனால் அதன் பிறகும் போலி குடிநீர் பாக்கெட்டுகளின் விற்பனை வழக்கம்போல் ஆரம்பித்துவிட்டன. பெரும்பாலான பெட்டிக் கடைகள், மதுபானக் கடை பார்கள் ஆகியவற்றில் இவை அதிக அளவில் விற்கப்படுகின்றன. சென்னையில் வெயில் தாக்கம் இப்போதே அதிகரித்துவிட்ட நிலையில், குடிநீர் பாக்கெட்டுகளின் விற்பனையும் சூடுபிடிக்க ஆரம்பித்து விட்டன.
'சுகாதாரமற்ற குடிநீரைக் குடிப்பதால் 80 சதவீத தொற்று நோய்கள் வருகின்றன. காலரா, வாந்தி}பேதி, டைபாய்டு, மஞ்சள் காமாலை, விதவிதமான காய்ச்சல்கள் உள்ளிட்ட நோய்கள் பரவுகின்றன. ஆனால் மக்களிடையே போதிய விழிப்புணர்வு இல்லை. கேன்களில் அடைக்கப்பட்டு விற்பனை செய்யப்படும், குடிநீரையும் காய்ச்சிதான் குடிக்க வேண்டும். சிறிய பாலிதீன் பைகளில் அடைத்து விற்கப்படும் குடிநீர், உடல் நலத்துக்கு உகந்ததல்ல. சுகாதாரமற்ற இந்த முறையில் குடிநீரை விற்பனை செய்யும் தனியார் நிறுவனங்கள் மீது அவ்வப்போது நடவடிக்கை எடுப்பதைக் காட்டிலும், குடிநீர் பாக்கெட்டுகளுக்கு முழுவதுமாக தடை விதிப்பதே சிறந்தது' என்று சென்னை அமைந்தகரையைச் சேர்ந்த டாக்டர் ஒருவர் கூறினார்.
இதுகுறித்து மாநகாரட்சி உயர் அதிகாரி கூறியது:
குடிநீர் பாக்கெட்டுகள் தயாரிக்கும் நிறுவனங்கள் பெரும்பாலும், சென்னை புறநகர் பகுதிகளில் செயல்பட்டு வருகின்றன. இந்த பாக்கெட் குடிநீர் சுகாதாரமற்ற முறையில் இருப்பதாகத் தொடர் புகார்கள் வருகின்றன.
பொதுமக்களின் உடல் நலனைக் கருத்தில் கொண்டு, குடிநீர் பாக்கெட்டுகளை சென்னையில் விற்பனை செய்யத் தடை விதிப்பது குறிப்பது குறித்து உத்தேசித்துள்ளோம்.
இதுகுறித்து உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. ஏப்ரல் மாதம் முதல் தடை விதிக்கப்படலாம் எனத் தெரிகிறது.
கேன் குடிநீர் குறித்தும் புகார்கள் வந்துள்ளன. எனவே, அந்த நிறுவனங்களிலும் தீவிர சோதனை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
வாக்குக்கு ரூ. 5,000 கொடுக்கும் திமுக: தவெக குற்றச்சாட்டு

கருப்புடன் வெளியாகும் நூறு சாமி?

சூர்யவன்ஷிக்கு ரசிகரான ஆஸ்திரேலிய கேப்டன் பாட் கம்மின்ஸ்!
திருச்சி மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோயிலில் திருக்கல்யாணம் கோலாகலம்
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

