டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

கழிவுநீரால் சீரழியும் தண்டையார்பேட்டை அரசு புறநகர் மருத்துவமனை

திருவொற்றியூர், செப். 5: சுற்றிலும் தேங்கி உள்ள கழிவுநீரால் தண்டையார்பேட்டை அரசு புறநகர் மருத்துவமனை தொடர் சீரழிவுக்கு உள்ளாகி வருகிறது. இதனால் நோயாளிகள் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றனர்.  சென்னை அரசு

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 5:21 pm

முகவை க.சிவக்குமார்

திருவொற்றியூர், செப். 5: சுற்றிலும் தேங்கி உள்ள கழிவுநீரால் தண்டையார்பேட்டை அரசு புறநகர் மருத்துவமனை தொடர் சீரழிவுக்கு உள்ளாகி வருகிறது. இதனால் நோயாளிகள் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றனர்.

 சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையின் புறநகர் மருத்துவமனை தண்டையார்பேட்டையில் இயங்கி வருகிறது. இங்கு நூற்றுக்கும் அதிகமானோர் உள் நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர். காய்ச்சல் மற்றும் தொற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள்தான் இங்கு அதிக அளவில் வருகின்றனர். வடசென்னையின் குடிசை பகுதிகளில் வசிக்கும் மக்கள் இம்மருத்துவமனையைத்தான் பெரிதும் நம்பி உள்ளனர். இவ்வாறு பல்வேறு வகையில் முக்கியத்துவம் வாய்ந்த இம்மருத்துவமனை சமீப நாள்களாக சில பிரச்னைகளால் சீரழிந்து வருகிறது.

கழிவுநீரால் துர்நாற்றம்: மருத்துவமனையின் நுழைவு வாயிலிலேயே நோயாளிகள் உள்ளே நுழைய முடியாத அளவிற்கு கழிவுநீர் தேங்கி உள்ளது. இதனால் மருத்துவமனை வளாகம் முழுவதும் துர்நாற்றமும் வீசுகிறது. தவிர மருத்துவமனைக்கு வெளியே இந்தியன் ஆயில் நிறுவனத்துக்குச் செல்லும் டேங்கர் லாரிகள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்படுகின்றன.

 லாரி போக்குவரத்து நெரிசல் ஏற்படும் நேரங்களில் எழுப்பப்படும் ஹாரன் ஒலியால் மருத்துவமனையே அதிர்கிறது. இப்பகுதியை சிறுநீர் கழிப்பிடமாகவும் பலர் மாற்றி வருகின்றனர். அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் தற்போது புதிய அடுக்குமாடி கட்டடங்கள் கட்டப்பட்டு வருவதால் அங்கும் கடும் இடநெருக்கடி இருந்து வருகிறது. இதனால் வடசென்னை தண்டையார்பேட்டை, ஆர்.கே.நகர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் இம்மருத்துமனையைத்தான் பயன்படுத்தி வருகின்றனர்.

நடவடிக்கை இல்லை: இந்தப் பிரச்னைகள் குறித்து மருத்துவமனையின் தலைமை மருத்துவர் சின்னதம்பி கூறியது:

கழிவு நீர் தேங்கி உள்ளதால் நோயாளிகள், மருத்துவர்கள், செவிலியர்கள் என அனைவரும் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர் என்பது உண்மைதான். டேங்கர் லாரிகளால் ஏற்படும் பிரச்னையாலும் மருத்துவமனையின் அமைதி குலைந்துள்ளது.

 கடந்த மூன்று மாதங்களாக இப்பிரச்னை நீடிக்கிறது. இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள், போக்குவரத்து போலீஸôரிடம் பலமுறை புகார் அளித்துள்ளோம். அவ்வப்போது சில நடவடிக்கைககளை அவர்கள் எடுத்தாலும் பிரச்னை தீர்ந்தபாடில்லை.

 நாள்தோறும் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நோயாளிகள் புறநோயாளிகளாக வந்து செல்லும் இம்மருத்துவமனைக்கு அடிப்படை வசதிகளை மேம்படுத்துவது குறித்தும், சுற்றுப்புறங்களில் உள்ள கழிவுநீர் உள்ளிட்ட பிரச்னைகள் குறித்தும் சுகாதாரத்துறை உயர் அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளோம் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.