பராமரிக்கப்படாத பயணிகள் நிழற்குடைகள்!
சென்னை, ஏப். 8: சென்னை மாநகரில் வணிக நோக்கத்துடன் தனியாரிடம் ஒப்படைக்கப்பட்ட பஸ் நிறுத்த நிழற்குடைகள் தவிர, மற்ற நிழற்குடைகள் முறையாகப் பராமரிக்கப்படாததால் பயணிகள் வெயிலில் வாடும் நிலை ஏற்பட்டுள்ளது.


சென்னை, ஏப். 8: சென்னை மாநகரில் வணிக நோக்கத்துடன் தனியாரிடம் ஒப்படைக்கப்பட்ட பஸ் நிறுத்த நிழற்குடைகள் தவிர, மற்ற நிழற்குடைகள் முறையாகப் பராமரிக்கப்படாததால் பயணிகள் வெயிலில் வாடும் நிலை ஏற்பட்டுள்ளது.
சென்னை மாநகரில் மிகப் பெரிய டிஜிட்டல் விளம்பரப் பதாகைகளை வைக்க நீதிமன்றம் தடை விதித்தது. அதன் பின்னர், வணிக நிறுவனங்களின் விளம்பரங்களைப் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கும் முக்கிய இடங்களாக பயணிகள் நிழற்குடைகள் மாறின.
விளம்பரங்கள் மூலம் கிடைக்கும் வருவாயைக் கருத்தில் கொண்டு, நிழற்குடைகளைப் பராமரிக்கும் பொறுப்பிலிருந்து மாநகராட்சி நிர்வாகம் விலகத் தொடங்கியது. இதனால் சென்னை மாநகரம் முழுவதும் ஏராளமான பயணிகள் நிழற்குடைகள் பராமரிப்பின்றி உள்ளன. பல நிழற்குடைகளில் மேற்கூரைகள் இல்லை. இதனால் பஸ்ஸýக்காகக் காத்திருக்கும் பயணிகள் வெயிலில் வாடுகின்றனர்.
இதற்கிடையே பயணிகளின் இத்தகைய சிரமங்களைச் சுட்டிக்காட்டி நேதாஜி போக்குவரத்துத் தொழிலாளர்கள் பாதுகாப்புத் தொழிற்சங்கத்தின் பொருளாளர் ஏ.விஜயராஜன் மாநகராட்சி ஆணையரிடம் கோரிக்கை மனு ஒன்றை அளித்தார். ஆனால், அதற்கு பலனில்லாததால் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
அந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், தேவைப்படும் இடங்களில் பயணிகள் நிழற்குடைகள் அமைக்க மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கடந்த மார்ச் மாதம் உத்தர
விட்டது.
இதையடுத்து, சென்னை மாநகராட்சிப் பகுதியில் உள்ள 1,150 நிழற்குடைகளை நவீனமயமாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகராட்சி நிர்வாகம் அறிவித்தது. இதன்படி கட்டுதல், நிர்வகித்தல், திரும்ப ஒப்படைத்தல் திட்டத்தின் கீழ் தனியார் விளம்பர நிறுவனங்களுக்கு நிழற்குடைகள் ஏலம் விடப்படுகின்றன.
எனினும், இதுவரை 100-க்கும் குறைவான நிழற்குடைகளே நவீன முறையில் அமைக்கப்பட்டுள்ளன. மாநகரில் உள்ள பெரும்பாலான பகுதிகளில் சுட்டெரிக்கும் வெயிலில் பயணிகள் பஸ்ஸýக்காகக் காத்திருக்கும் அவல நிலையே உள்ளது.
பஸ்ஸýக்காகக் காத்திருக்கும் பயணிகளை வெயிலிலிருந்து பாதுகாப்பதற்கான வசதிகளை செய்து தருவது அரசு மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் முதன்மையான கடமை.
எனவே, விளம்பர வருவாயைக் கருத்தில் கொள்ளாமல், தனியார் ஆர்வம் காட்டாத இடங்களில் மாநகராட்சி நிர்வாகமே தனது நிதியில் இருந்து உடனடியாக நிழற்குடைகளை அமைத்துப் பராமரிக்க வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...