பயன்படாத நவீன வசதிகள்: துருப்பிடித்துப் போன கருவிகள் இம்மருத்துவமனையில் 50 உள்நோயாளி படுக்கைகள், பிரசவ அறை, அறுவைச் சிகிச்சைக் கூடம், ரூ.4 லட்சம் செலவில் எக்ஸ் ரே, சுமார் ரூ.15 லட்சம் செலவில் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன், பரிசோதனைக் கூடம், மருந்தகம் உள்ளிட்ட அனைத்து கட்டமைப்பு வசதிகளும் அமைக்கப்பட்டிருந்ததால் மருத்துவமனை திறந்து வைக்கப்பட்ட நாளில் இருந்தே சிகிச்சைக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை மளமளவென உயர்ந்தது. ஆனால் சிகிச்சையளிக்க போதுமான மருத்துவர்கள், செவிலியர்கள், பணியாளர்கள் இல்லாததால் இவ்வசதிகளை முழுமையாகப் பயன்படுத்தப்படவில்லை. சுமார் 3 லட்சம் பேர் பயன் பெற வசதியாகக் கட்டப்பட்ட இம்மருத்துவமனை அதிகாரிகளின் கவனமின்மையால் முக்கியத்துவம் இழந்து வருகிறது. 50 படுக்கைகளில் ஒருவர் கூட உள்நோயாளியாக அனுமதிக்கப்படவில்லை. மருத்துவமனை முழுவதும் தூசி அடைந்து, நாற்காலிகள், கட்டில்கள் எல்லாம் துருப்பிடித்துப் போய் உள்ளன.