கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

மதுராந்தகத்தில் எக்ஸ்பிரஸ் ரயில்கள் நின்று செல்ல பயணிகள் கோரிக்கை

மதுராந்தகம் இரயில் நிலையத்தில் அனைத்து எக்ஸ்பிரஸ் ரயில்களும் நின்று செல்ல வேண்டும் என பயணிகள் தென்னக இரயில்வே நிர்வாகத்துக்கு

News image
Updated On :27 ஜூன் 2014, 3:06 pm

குமார்

மதுராந்தகம் இரயில் நிலையத்தில் அனைத்து எக்ஸ்பிரஸ் ரயில்களும் நின்று செல்ல வேண்டும் என பயணிகள் தென்னக இரயில்வே நிர்வாகத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

மதுராந்தகம் இரயில் நிலையத்தில் இருந்து சுற்றுபுற 100க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து சென்னை, செங்கல்பட்டு, தாமபரம், தென்னக மாவட்டமான கன்யாகுமரி, திருச்சி போன்ற இடங்களுக்கு வேலைக்காகவும், கல்லூரியில் படிக்கவும் சுமார் 1000க்கும் மேற்பட்டோர் சீசன் பாஸ் மூலம் சென்று வருகின்றனர். அவர்களுக்கு இரயில்வசதி பேரூதவியாக இருந்து வந்தது.

இந்நிலையில், இந்த இரயில் நிலையத்தில் ஏற்கெனவே மீட்டர்கேஜ் பாதையாக இருந்தபோது இந்த வழியாக சென்றுக் கொண்டிருந்த எக்ஸ்பிரஸ் இரயில்களான அனந்தபுரி (16123,16124), முத்துநகர் (12693, 12694), சோழன் (16853,16854),  சேது (16713,16714), ராக்போர்ட் (16177,16178), கம்பன் ,குருவாயூர் (16127,16128), இராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் இரயில் (16701,16702), விழுப்புரம் பாசஞ்சர், புதுச்சேரி எக்ஸ்பிரஸ் போன்ற அனைத்து இரயில்களும் சுமார் 20 வருடங்களாக நின்று சென்றன. ஆனால், அகல இயில்பாதையாக மாற்றப்பட்டதால், தற்சமயம் அனந்தபுரி எக்ஸ்பிóரஸ் (16123, 16124)

முத்துநகர் (12693,16694) மற்றும் புதுச்சேரி (16115,16116), பாசஞசர் ரயில்கள் மட்டுமே மதுராந்தகத்தில் நின்று செல்கின்றன. இதனால் சென்னை நகரை நோக்கி செல்பவர்கள் குறைந்த இரயில்கள் நிற்பதாலும், போதிய இரயில்கள் நிற்காமல் போவதாலும் பெரும் அவதிக்கு உள்ளாகின்றனர். மேலும், மதுராந்தகம் இரயில்நிலையம் வழியாக செல்லும் குறிப்பிட்ட இரயில்கள் சென்னைக்கும் மற்றும்

தெற்கு நோக்கி செல்லும் இரயில்கள் மதுராந்தகம் நின்று சென்றால் சீசன் பயணிகளுக்கும் மிகவும் வசதியாக இருக்கும். இதனால் இந்த வழியாக செல்லும் இரயில்கள் நிற்காமல் செல்வதால் பயணிகள் பஸ் மூலம் சென்னைக்கும் தெற்கு நோக்கி செல்ல பஸ்களில் அதிக கட்டணம் கொடுத்து செல்ல வேண்டிய அவல நிலைக்கு மக்கள் தள்ளப்படுகின்றனர்.

எனவே, மதுராந்தகம் இரயில்நிலையத்தில் நிறுத்தவேண்டிய இரயில்களான சேது எக்ஸ்பிரஸ் ரயில், குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயில், சோழன் எக்ஸபிரஸ் ரயில், ராக்போர்ட் எக்ஸ்பிரஸ் ரயில், மங்களூர் எக்ஸபிரஸ் ரயில், இராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரயில் ஆகிய இரயில்கள் அனைத்தும் நின்று செல்லவும், கணினி முன்பதிவு மையம் துவக்கப்படவேண்டும் என மதுராந்ககம் சீசன் டிக்கெட் பயணிகள் மற்றும் இரயில் பயணிகள் தென்னக இரயில்வே நிர்வாகத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.