சென்னை விருகம்பாக்கம் பகுதியில் கடந்த ஒரு மாதமாக சாலையில் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால், அந்தப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
விருகம்பாக்கம் லாம்பார்ட் நகர் முதல் தெருவில் உள்ள சாலையில் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாகக் கழிவு நீர் வழிந்தோடுகிறது. இதனால், அந்தப் பகுதி முழுவதும் கடும் துர்நாற்றம் வீசுவதுடன், சுகாதாரக் கேடும் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து அந்தப் பகுதியைச் சேர்ந்த உமா ஜெயராமன், ஆர்.ஜெயபாலன், சி.வி.சுரேஷ் உள்ளிட்டோர் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:
நவம்பர் இறுதி வாரத்திலிருந்து சாலையில் கழிவு நீர் ஓரடி உயரத்துக்கு வழிந்தோடுகிறது.
தொடர்ந்து பலத்த மழை பெய்ததால், 5 அடி உயரத்துக்கு தேங்கிய மழை நீர் இங்குள்ள வீடுகளுக்குள் புகுந்தது. அப்போது மழை நீருடன் கழிவு நீர் கலந்திருந்ததால் பகுதி முழுவதும் கடும் துர்நாற்றம் வீசியது. இதைத் தொடர்ந்து, குடிநீர் வடிகால் வாரியம், மாநகராட்சி அதிகாரிகள் தண்ணீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனர். இருப்பினும், இதுவரை இந்தப் பிரச்னை தீரவில்லை.
மிகுந்த சிரமம்: இந்தச் சாலையில் சுமார் 100 அடி தொலைவுக்கு கழிவு நீர் தேங்கி நிற்கிறது. இதனால், இந்த வழியாகச் செல்லும் மாணவர்கள், முதியோர் மிகவும் சிரமப்படுகின்றனர். சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டுள்ளதால் வழக்கமாக இந்த வழியாகச் செல்வோர் மாற்றுப் பாதை வழியாகச் செல்கின்றனர். சாலையின் முக்கிய சந்திப்புகளில் உள்ள கழிவு நீர்க் குழாய்கள் முறையாகப் பராமரிக்கப்படாததே இதற்குக் காரணம்.
இந்தப் பிரச்னை குறித்து தொடர்புடைய அதிகாரிகளிடம் பல முறை நேரடியாகவும், தொலைபேசியிலும் புகார் அளித்துவிட்டோம். சாலை மறியல் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டோம். அதன்பேரில், ஓரிரு முறைகள் இந்தப் பகுதியில் பராமரிப்பு மேற்கொள்ளப்பட்டது. ஆனால், அடுத்த நாளே மீண்டும் அடைப்பு ஏற்பட்டு கழிவு நீர் வழிந்தோடுகிறது.
தொடரும் சுகாதாரச் சீர்கேடு: ஒரு மாதமாக தொடர்ந்து சுதாதாரக்கேடு நிலவுவதால் தேங்கிய கழிவு நீரை அகற்ற இந்தப் பகுதியைச் சேர்ந்த மக்கள் சொந்தச் செலவில் பல்வேறு பராமரிப்புப் பணிகளை மேற்கொண்டும் எந்தப் பயனும் ஏற்படவில்லை.
தேங்கிய கழிவு நீரால் நோய்கள் பரவ வாய்ப்புள்ளது. எனவே, இந்தப் பிரச்னைக்கு நிரந்தத் தீர்வு காண தொடர்புடைய அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
இதேபோல, வளசரவாக்கம் பகுதியில் உள்ள கழிவு நீர்க் குழாய்களின் பல பகுதிகளில் அடைப்பு ஏற்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நிம்பஸ் ப்ராஜெக்ட் 4வது காலாண்டு விற்பனை 77% உயர்வு!

மகளிர் டி20 உலகக் கோப்பைக்கான பரிசுத் தொகையை உயர்த்திய ஐசிசி; எவ்வளவு தெரியுமா?

மே 5, மேற்கு வங்கத்தில் பாஜக முதல்வர் பதவியேற்பார் : அமித் ஷா உறுதி

டிம் டேவிட், ஹார்திக் பாண்டியாவுக்கு அபராதம் விதித்த ஐபிஎல் நிர்வாகம்!
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


