முதல்வர் விஜய் தங்கியிருந்த தில்லி தமிழ்நாடு இல்லத்தின் உணவகத்தில் தீ விபத்து!எத்தனால் கலந்த பெட்ரோல் மீதான கலால் வரி நீக்கம்!தேனியில் பாரதிராஜா உடல்! பொதுமக்கள் அஞ்சலி!!உலகக் கோப்பை கால்பந்து இன்று தொடக்கம்: வரலாற்றில் மிகப் பெரிய போட்டி மத்திய கிழக்கில் மீண்டும் வெடித்த மோதல்5 பேரவை தொகுதிகளுக்கு விரைவில் இடைத்தோ்தல்: தமிழக தலைமைத் தோ்தல் அதிகாரி கடிதம் முதல்வா் விஜய்-சங்கீதா விவாகரத்து வழக்கு: இன்று விசாரணைக்கு வருகிறது அமெரிக்கா, சீனாவுக்கு இந்திய மின்னணுப் பொருள்கள் ஏற்றுமதி: அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் தகவல் எம்எஃப்ஐ நிறுவனங்களுக்கு கடன் உத்தரவாத திட்டம்: மத்திய அரசு நீட்டிப்பு
/

செப். 27-இல் சி.பா.ஆதித்தனார் இலக்கியப் பரிசளிப்பு விழா

தினத்தந்தி நாளிதழ் நிறுவனர் சி.பா.ஆதித்தனாரின் 111-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, இலக்கியப் பரிசளிப்பு விழா சென்னையில்

News image
Updated On :25 செப்டம்பர் 2015, 1:58 am IST

தினத்தந்தி நாளிதழ் நிறுவனர் சி.பா.ஆதித்தனாரின் 111-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, இலக்கியப் பரிசளிப்பு விழா சென்னையில் ஞாயிற்றுக்கிழமை (செப்.27) நடைபெறவுள்ளது.
 தினத்தந்தி நிறுவனர் சி.பா.ஆதித்தனார் பிறந்த நாளையொட்டி ஆண்டுதோறும் இலக்கியப் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, இந்த ஆண்டுக்கான "மூத்த தமிழறிஞர் விருது' முனைவர் பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமனுக்கு வழங்கப்படுகிறது. வெள்ளிப்பட்டயத்துடன் ரூ.3 லட்சம் கொண்டது இந்த விருது.
 திரைப்பட இயக்குநர் தங்கர்பச்சானுக்கு, இலக்கியப் பரிசாக ரூ.2 லட்சம் வழங்கப்படுகிறது. "தங்கர்பச்சான் கதைகள்' என்ற சிறுகதைத் தொகுதிக்காக இந்தப் பரிசு அளிக்கப்படுகிறது.
 இலக்கியப் பரிசளிப்பு விழா வரும் ஞாயிற்றுக்கிழமை (செப்.27) மாலை 6 மணிக்கு சென்னை அண்ணா சாலையில் உள்ள ராணிசீதை மன்றத்தில் நடைபெறுகிறது. விழாவில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி வெ.இராமசுப்பிரமணியன் பரிசுகளை வழங்கி சிறப்புரையாற்றுகிறார். இதில் தினத்தந்தி நாளிதழ் இயக்குநர் சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தன் வரவேற்றுப் பேசவுள்ளார்.
 
 
 
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.