நீதி ஆயோக் கூட்டம் தொடங்கியது! முதல்வர் விஜய் பங்கேற்பு!!முதல்வர் விஜய் தங்கியிருந்த தில்லி தமிழ்நாடு இல்லத்தின் உணவகத்தில் தீ விபத்து!எத்தனால் கலந்த பெட்ரோல் மீதான கலால் வரி நீக்கம்!தேனியில் பாரதிராஜா உடல்! பொதுமக்கள் அஞ்சலி!!உலகக் கோப்பை கால்பந்து இன்று தொடக்கம்: வரலாற்றில் மிகப் பெரிய போட்டி மத்திய கிழக்கில் மீண்டும் வெடித்த மோதல்5 பேரவை தொகுதிகளுக்கு விரைவில் இடைத்தோ்தல்: தமிழக தலைமைத் தோ்தல் அதிகாரி கடிதம் முதல்வா் விஜய்-சங்கீதா விவாகரத்து வழக்கு: இன்று விசாரணைக்கு வருகிறது அமெரிக்கா, சீனாவுக்கு இந்திய மின்னணுப் பொருள்கள் ஏற்றுமதி: அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் தகவல் எம்எஃப்ஐ நிறுவனங்களுக்கு கடன் உத்தரவாத திட்டம்: மத்திய அரசு நீட்டிப்பு
/

அரசுப் பள்ளியில் மகளை சேர்த்த மானாமதுரை தவெக எம்எல்ஏவுக்கு குவியும் வாழ்த்து!

அரசுப் பள்ளியில் மகளை சேர்த்த தமிழக வெற்றிக் கழக எம்.எல்.ஏ-வுக்கு வாழ்த்துகள் குவிந்து வருவதைப் பற்றி...

News image

அரசுப் பள்ளியில் மகளை சேர்த்த மானாமதுரை தவெக எம்எல்ஏ இளங்கோவன்.

Updated On :11 ஜூன் 2026, 9:50 am IST

தனது மகளை அரசுப்பள்ளியில் சேர்த்த தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த எம்.எல்.ஏ. இளங்கோவனுவுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் புதிய ஆட்சி பொறுப்பேற்றதிலிருந்து பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அரசு ஊழியர்கள், அமைச்சர்கள் உள்ளிட்டோர் தாங்கள் மற்றும் தங்களது உறவினர்களுக்கு உடல் பரிசோதனை, சிகிச்சைகளை அரசு மருத்துவமனைகளிலேயே மேற்கொள்வார்கள் என்றும், அவர்களின் குழந்தைகள் அரசுப்பள்ளிகளில் சேர்க்கவும் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ் அறிவுறுத்தியிருந்தார்.

இந்த நிலையில், மானாமதுரை (தனி) சட்டப்பேரவைத் தொகுதியின் தமிழக வெற்றிக் கழக எம்.எல்.ஏவான இளங்கோவன், தனது மகள் தேவமித்ராவை திருப்புவனம் அரசுப் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சேர்த்துள்ள சம்பவம் பலரிடம் பாராட்டுகளைப் பெற்றுள்ளது.

திருப்புவனம் அருகே, அகரம் கிராமத்தை சேர்ந்தவர் இளங்கோவர். தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் முதல்முறையாக போட்டியிட்டு 69,971 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளரைத் தோற்கடித்திருந்தார். இவருக்கு, ஜெயலட்சுமி என்ற மனைவியும் தேவமித்ரா என்ற மகளும் உள்ளனர்.

எம்.எல்.ஏ. இளங்கோவனின் மகள் தேவமித்ரா, அகரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 5 ஆம் வகுப்பு படித்து முடித்துள்ளார். புதிய கல்வியாண்டு தொடங்கிய நிலையில், அவரை திருப்புவனம் அரசுப் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சேர்த்து எம்எல்ஏவாக தேர்வான பின்பும் அரசுப் பள்ளியிலேயே மகளை தொடரச் செய்துள்ளார் எம்.எல்.ஏ. இளங்கோவன்.

இதுகுறித்து எம்.எல்.ஏ. இளங்கோவன் கூறுகையில், “தான் அரசுப் பள்ளியில் படித்ததாகவும், தனது மகளும் அரசுப் பள்ளியிலேயே கல்வி பயில வேண்டும் என்ற விருப்பத்தின் அடிப்படையில் இந்த முடிவை எடுத்துள்ளதாக”வும் அவர் தெரிவித்தார்.

திருப்புவனம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு நேற்று எம்.எல்.ஏ., இளங்கோவன், மனைவியுடன் சென்று, மகளை ஆறாம் வகுப்பில் சேர்த்துவிட்டார். அதைத்தொடர்ந்து பள்ளிக்கான தேவைகள் குறித்து கேட்டறிந்தார்.

Summary

Appreciation is pouring in for Ilangovan, an MLA from the Tamizhaga Vettri Kazhagam, for enrolling his daughter in a government school.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.