மஹிந்திரா லாஜிஸ்டிக்ஸ் காலாண்டு லாபம் ரூ. 29 கோடியாக உயர்வு!அல்ட்ராடெக் சிமெண்ட் காலாண்டு லாபம் 17% உயர்வு!மேக்கேதாட்டு அணை: கர்நாடக அரசை எதிர்த்து தேமுதிக கண்டன ஆர்ப்பாட்டம்!இயற்கை எரிவாயு மையத்தில் முதல்வர் விஜய் ஆய்வு!துப்பாக்கி முனையில் மிரட்டிய காவல் துறை: கைதான திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன்!மாணவர்கள் மீது தடியடி நடத்துவதுதான் ஜனநாயகமா? பிரதமர் மோடிக்கு ராகுல் கேள்விதுப்பாக்கி முனையில் மிரட்டிய காவல் துறை: கைதான திமுக எம்.எல்.ஏ.டிராமா செய்கிறார் திமுக எம்.எல்.ஏ! - நிர்மல் குமார்பேச்சுவார்த்தைக்கு பதிலாக வன்முறையைத் தேர்வு செய்த பாஜக: கனிமொழி விமர்சனம்
/

எழுத்தாளர் லட்சுமணன் காலமானார்

மஞ்சரி இதழின் முன்னாள் ஆசிரியரும், எழுத்தாளர் சாருகேசியின் சகோதரருமான "லெமன்' (எ) எஸ்.லட்சுமணன் (84) உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் வெள்ளிக்கிழமை இரவு (அக்.27) காலமானார்.

Updated On :29 அக்டோபர் 2017, 3:00 am IST

மஞ்சரி இதழின் முன்னாள் ஆசிரியரும், எழுத்தாளர் சாருகேசியின் சகோதரருமான "லெமன்' (எ) எஸ்.லட்சுமணன் (84) உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் வெள்ளிக்கிழமை இரவு (அக்.27) காலமானார். அவருக்கு துர்கா என்ற ஒரு மகள் உள்ளார். 
சேலத்தைச் சேர்ந்த எஸ்.லட்சுமணன் (எ) லெமன், மிக இளம் வயதிலேயே எழுத்துத் துறையில் ஆர்வத்துடன் நுழைந்தவர். மரபுக் கவிதைகள் எழுதுவதில் பெரிதும் ஆர்வம் கொண்டிருந்த அவர், சிறுவர் இதழான 'கண்ணனி'ல் பல சிறுவர் இலக்கியங்களைப் படைத்தவர். அதன் துணையாசிரியராகவும் சில ஆண்டுகள் பணியாற்றிவிட்டு பின்னர் கலைமகள் நிறுவனத்துக்குப் பணிக்கு வந்தார். 'கண்ணனி'ல் அவர் படைத்த சிறுவர் கதைகள், பாலர் பாடல்கள் சிறுவர் இலக்கியத்தில் தவிர்க்கப்பட முடியாதவை. 
சிறுவர் இதழில்...: தனது கவிதையாற்றல் காரணமாக மாதம் இரு முறை வெளியான "கண்ணன்' இதழின் துணை ஆசிரியராக எழுத்தாளர் "லெமன்' பணியாற்றினார். அதன் பிறகு மஞ்சரி இதழின் ஆசிரியராக அவர் பொறுப்பேற்றார்.
தமிழின் "ரீடர்ஸ் டைஜஸ்ட்': தி.ஜ.ர. (தி.ஜ.ரங்கநாதன்) ஆரம்பித்து வைத்த புத்தகச் சுருக்கம் என்ற பகுதியை மஞ்சரி தொடர்ந்து வெளியிட்டு வந்தது. இந்திய இலக்கியம், வரலாறு, மருத்துவம், சமூகம் விஞ்ஞானம், பொருளாதாரம் எனப் பலதரப்பட்ட துறைகள் குறித்த செய்திகள், உலகப் புகழ்பெற்ற நாவல்கள், சுயசரிதங்களை மஞ்சரியில் வெளியிட்டு அதன் வளர்ச்சிக்கு லெமன் துணைநின்றார். அவரது காலகட்டத்தில் மஞ்சரியை தமிழுக்கான "ரீடர்ஸ் டைஜஸ்ட்' எனச் சொல்லும் அளவுக்கு புகழ் பெற வைத்தார்.
ஓய்வுக்குப் பிறகும் எழுத்துப்பணியைத் தொடர்ந்தார். "கல்கி', "அமுதசுரபி' உள்ளிட்ட பல இலக்கியப் பத்திரிகைகளில் அவரது படைப்புகள் வெளியாகின. இவர் எழுதிய சிறார் கவிதைத் தொகுப்புகள் "கொக்கரக்கோ', "சிப்பாய் வரார்' ஆகிய இரண்டும் கலைமகள் வெளியீடுகளாக ரெஸாக்கின் வண்ண ஓவியங்களுடன் வெளியாகி முதல் நூலுக்கு மத்திய அரசின் பரிசும் கிடைத்தது.
மறைந்த எழுத்தாளர் "லெமன்' எழுதிய "மழைக் கிளிகள்' என்ற சிறுவர் கதைப் புத்தகம் விரைவில் வெளியாகவுள்ளது. அவருடைய இறுதிச் சடங்குகள் சென்னை மயிலாப்பூரில் உள்ள மயானத்தில் சனிக்கிழமை (அக்.28) நடைபெற்றது. தொடர்புக்கு...9841876468.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.