
சென்னை அண்ணா நகரில் அமைந்துள்ள கிங் மேக்கர்ஸ் ஐ.ஏ.எஸ். அகாதெமியில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 2 தேர்வை எதிர்கொள்வதற்கான இலவச கருத்தரங்கம் வரும் ஞாயிற்றுக்கிழமை (ஆக.19) நடைபெறுகிறது.
இதுகுறித்து அதன் இயக்குநர் சத்யஸ்ரீ பூமிநாதன் தெரிவித்ததாவது:
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் 1,199 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான நேர்முகத் தேர்வுடன் கூடிய குரூப் 2 தேர்வுக்கான அறிவிப்பு கடந்த 10-ஆம் தேதி வெளியானது. முதல்நிலை தேர்வு வரும் நவம்பர் 11-இல் நடைபெறவுள்ளது. இத்தேர்வை எதிர்கொள்வதற்கான இலவச கருத்தரங்கம் ஞாயிற்றுக்கிழமை (ஆக.19) காலை 9 முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெறவுள்ளது. இக்கருத்தரங்கில் பிரவீண் ஐ.எஃப்.எஸ். , துணை ஆட்சியர் வி.பி.ஜெகதீஸ்வரன் ஆகியோர் தேர்வை எதிர்கொள்வதற்கான வழிமுறைகளை எடுத்துரைக்கவுள்ளனர்.
இக்கருத்தரங்கில் பங்கேற்க விரும்புவோர் செல்லிடப்பேசி எண்.94442 27273-க்கு தங்கள் பெயர், கல்வித் தகுதி, தொடர்பு எண் உள்ளிட்ட விவரங்களை குறுந்தகவலாக அனுப்பி பதிவு செய்து கொள்ளலாம். மேலும் தகவல்களுக்கு டபுள்யு 4, 5-ஆவது மெயின் சாலை, அண்ணா நகரில் உள்ள அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




