இந்து அறநிலைய  செயல் அலுவலர் பதவி: நேர்காணலுக்கு தேர்வானோர் பட்டியல் வெளியீடு

இந்து சமய அறநிலையத் துறை செயல் அலுவலர் பதவிக்கான நேர்காணலுக்கு தெரிவு செய்யப்பட்டோரின் பட்டியலை டி.என்.பி.எஸ்.சி. வெளியிட்டுள்ளது.

Published On :30 ஜனவரி 2024, 10:08 pm IST

சென்னை: இந்து சமய அறநிலையத் துறை செயல் அலுவலர் பதவிக்கான நேர்காணலுக்கு தெரிவு செய்யப்பட்டோரின் பட்டியலை டி.என்.பி.எஸ்.சி. வெளியிட்டுள்ளது.
இது குறித்து டி.என்.பி.எஸ்.சி. தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் ஆர்.சுதன் வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:-தமிழ்நாடு இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை சார்நிலைப்  பணி மற்றும் செயல் அலுவலர் பதவிக்கான எழுத்துத் தேர்வு கடந்த ஜனவரியில் நடந்தது.  அதில் மொத்தம் 271  பேர் பங்கேற்றனர். 
விண்ணப்பதாரர்கள் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள், இடஒதுக்கீட்டு விதி மற்றும் அந்தப் பதவிகளுக்கான அறிவிக்கையில் வெளியிடப்பட்ட பிற விதிகளின் அடிப்படையில், நேர்காணல் தேர்வுக்கு தற்காலிகமாகத் தெரிவு செய்யப்பட்ட 7 விண்ணப்பதாரர்களின் பதிவெண்கள் கொண்ட பட்டியல் தேர்வாணைய இணையதளத்தில் (www.tnpsc.gov.in) வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான நேர்காணல் தேர்வு வரும் 17-ஆம் தேதியன்று தேர்வாணைய அலுவலகத்தில் நடைபெறும் என்று சுதன் 
தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.