/

ரியல் எஸ்டேட் அலுவலகத்தில் ரூ.10 லட்சம் திருட்டு

சென்னை மேற்கு மாம்பலத்தில் ரியல் எஸ்டேட் அலுவலகத்தில் ரூ.10 லட்சம் திருடப்பட்டது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News image
Updated On :5 பிப்ரவரி 2018, 10:55 pm

DIN

சென்னை மேற்கு மாம்பலத்தில் ரியல் எஸ்டேட் அலுவலகத்தில் ரூ.10 லட்சம் திருடப்பட்டது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேற்கு மாம்பலம் கணபதி தெருவைச் சேர்ந்தவர் ப.ரமேஷ் (44). இவர் தனது நண்பர் ஜான் கென்னடியுடன் சேர்ந்து ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இதற்கான அலுவலகம் அதே தெருவில் உள்ளது. இந்நிலையில் ரமேஷ் ஞாயிற்றுக்கிழமை இரவு தனது அலுவலகத்தை வழக்கம்போல பூட்டிவிட்டு வீட்டுக்குச் சென்றார்.
இந்நிலையில் திங்கள்கிழமை காலை அலுவலகத்தை திறக்க வந்தபோதுஅலுவலகத்தில் கதவு பூட்டை உடைத்து, பணப்பெட்டியை திறந்து அதில் இருந்த ரூ.10 லட்சம் திருடப்பட்டிருப்பதை பார்த்து ரமேஷ் அதிர்ச்சியடைந்தார். இது குறித்து அவர், அசோக்நகர் காவல் நிலையத்தில் செய்த புகாரின் அடிப்படையில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.