தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் ஆராய்ச்சித் துறை மாநிலத் தலைவராக நாசே ஆர்.ராஜேஷ் நியமிக்கப்பட்டுள்ளார்.
தேர்தலுக்கு தேவையான திட்டங்களை தயார் செய்து கட்சிக்கு ஆலோசனை வழங்க உறுதுணையாகவும், ஆளும் அரசின் மக்களுக்கு எதிரான திட்டங்களை வெளிப்படுத்தவும் தேசிய அளவில் கட்சியின் ஆராய்ச்சித் துறையை கட்சியின் தலைவர் ராகுல்காந்தி உருவாக்கியுள்ளார். இத்துறைக்கு தமிழகத்தின் மாநிலத் தலைவராக நாசே ஆர்.ராஜேஷ் கட்சித் தலைமையால் நியமிக்கப்பட்டுள்ளார்.
ராஜேஷ் இளைஞர் காங்கிரஸ் கட்சியின் மாநில துணைத் தலைவராக செயல்பட்டவர். 2014-இல் அரக்கோணம் பாராளுமன்ற தொகுதியிலும், 2016 சட்டப் பேரவை தேர்தலில் மதுரவாயல் சட்டப் பேரவை தொகுதியிலும் கட்சியின் சார்பில் நிறுத்தப்பட்டவர்.
எம்.பி.ஏ. பட்டதாரியான இவர், இளைஞர்களுக்கு இலவச தொழிற்பயிற்சியை அளித்து வேலைவாய்ப்பை உருவாக்கும் நாசே தன்னார்வத் தொண்டு அமைப்பின் துணைத் தலைவராகவும் உள்ளார். அத்துடன் கடல்சார் பல்கலைக் கழகமான அமெட் பல்கலைக் கழகத்தின் இணை வேந்தராக பொறுப்பில் உள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.