தலைமைச் செயலகத்தை முற்றுகையிட முயற்சி: நால்வர் கைது
சென்னை தலைமைச் செயலகத்தை முற்றுகையிட வந்த 4 பேர் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனர்.


சென்னை தலைமைச் செயலகத்தை முற்றுகையிட வந்த 4 பேர் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனர்.
மக்களின் கருத்தை அறியாமல் தன்னிச்சையாக தமிழக அரசு, சட்டப்பேரவையில் லோக் ஆயுக்த சட்டத்தை நிறைவேற்றியதைக் கண்டித்து அறப்போர் இயக்கத்தினர், தலைமைச் செயலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை அறிவித்தனர். இதையடுத்து அந்த இயக்கத்தினர் தலைமைச் செயலகத்தை முற்றுகையிடுவதற்காக திங்கள்கிழமை வந்தனர். அவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தி, அந்த இயக்கத்தைச் சேர்ந்த ஒருங்கிணைப்பாளர் ஜெயராம், சட்ட பஞ்சாயத்து இயக்க ஒருங்கிணைப்பாளர் சிவ.இளங்கோ உள்பட 4 பேரை கைது செய்தனர். இந்த திடீர் போராட்டம் காரணமாக தலைமைச் செயலக பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...