தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசுப் பணியில் முன்னுரிமை! மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல்!பாகிஸ்தானின் மிகப்பெரிய மருத்துவமனையில் தீ! 15 பச்சிளம் குழந்தைகள் பலி! மோகன் பாகவத்தின் நியூயார்க் நிகழ்வுக்கு மேயர் மம்தானி எதிர்ப்பு!மலையாளச் சொந்தங்களுக்கு இதயங்கனிந்த ஓணம் வாழ்த்துகள்! முதல்வர் விஜய்‘மகாபலியின் மண்ணில் சமத்துவம் மலரட்டும்: மனமார்ந்த ஓணம் வாழ்த்துக்கள்!’ - மு.க.ஸ்டாலின்குழந்தைகள், முதியவா்களுக்கு எச்1என்1 வைரஸ் பரவும் அபாயம் அதிகம்: மருத்துவா்கள் எச்சரிக்கைமேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்றும், நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்புபி.எட். சோ்க்கை: செப். 4 இறுதிநாளை சாா்-பதிவாளா் அலுவலகங்களில் கூடுதல் முன்பதிவு டோக்கன்: பதிவுத் துறை

14-இல் மாற்றுத்திறனாளிகளுக்கு செல்லிடப்பேசி பழுதுபார்த்தல் பயிற்சி

மாற்றுத் திறனாளிகளுக்கு செல்லிடப்பேசி பழுதுபார்த்தல் தொடர்பான இலவச பயிற்சி மே 14-ஆம் தேதி சென்னை கிண்டியில் நடைபெறுகிறது.

Published On :30 ஜனவரி 2024, 6:30 pm IST

மாற்றுத் திறனாளிகளுக்கு செல்லிடப்பேசி பழுதுபார்த்தல் தொடர்பான இலவச பயிற்சி மே 14-ஆம் தேதி சென்னை கிண்டியில் நடைபெறுகிறது.
மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய வேலைவாய்ப்பு சேவை மையத்தின் சென்னைப் பிரிவு சார்பில், குறுகியகால இலவச பயிற்சி முகாம் நடைபெற உள்ளது. உடல்திறன் குறைபாடு உள்ளவர்கள் 
மற்றும் கேட்கும் திறனற்றவர்களுக்கு செல்லிடப்பேசி பழுதுபார்த்தல், தையல் கலை, வீட்டு உபகரணங்கள், ஸ்கிரீன் பிரிண்டிங், புக் 
பைண்டிங், சில்லறை விற்பனைப் பிரிவு ஆகியவற்றில் பயிற்சி வழங்கப்படவுள்ளது. 
செல்லிடப்பேசி பழுதுபார்த்தல் பயிற்சி: செல்லிடப்பேசி பழுதுபார்த்தல் பயிற்சிக்கு உடல் குறைபாடு உள்ளவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 15 முதல் 35 வயதுக்கு உள்பட்டவர்களுக்கு இந்த பயிற்சி வரும் 14-ஆம் தேதி அளிக்கப்படும். 12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், ஐ.டி.ஐ., பட்டயப் படிப்பு படித்தவர்கள் இதில் பங்கேற்கலாம். இந்தப் பயிற்சி சென்னை கிண்டியில் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய வேலைவாய்ப்பு சேவை மையத்தில் நடைபெறும்.
மே 17-இல் சில்லறை விற்பனைப் பிரிவு பயிற்சி: சில்லறை விற்பனைப் பிரிவுப் பயிற்சியில் மாற்றுத் திறனாளிகளும், செவித்திறன் குறைபாடு உள்ளவர்களும் கலந்து கொள்ளலாம். வயது வரம்பு 18 முதல் 35 வயது வரை. 8- ஆம் வகுப்புத் தேர்ச்சி பெற்றவர்கள் இதில் பங்கேற்கலாம். 
இவர்கள் மே 17-ஆம் தேதி சாந்தோம் ஹெல்ப் டிரஸ்ட் அலுவலகத்தில் நடைபெறும் பயிற்சியில் பங்கேற்கலாம். குறைந்த அளவு இடங்கள் மற்றும் விடுதி வசதி உள்ளதால் ஆர்வமுள்ளவர்கள் மே 14-க்கு முன்பாக மையத்தை அணுகலாம் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.