ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

எஸ்பிஐ அதிகாரி பணிக்கான தேர்வு: பிற்படுத்தப்பட்டோருக்கு இலவசப் பயிற்சி

பாரத ஸ்டேட் வங்கியில் (எஸ்பிஐ) காலியாக உள்ள அதிகாரி பதவிகளுக்கு விண்ணப்பித்துள்ள பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த தேர்வர்களுக்கு 2 மாதம் இலவசப் பயிற்சி அளிக்கப்படவுள்ளது என யூனியன் பேங்க் ஆஃப் இந்தி

Updated On :14 மே 2018, 9:29 pm

பாரத ஸ்டேட் வங்கியில் (எஸ்பிஐ) காலியாக உள்ள அதிகாரி பதவிகளுக்கு விண்ணப்பித்துள்ள பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த தேர்வர்களுக்கு 2 மாதம் இலவசப் பயிற்சி அளிக்கப்படவுள்ளது என யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான பணியாளர் நல சங்கம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து அச்சங்கத்தின் தமிழ்நாடுப் பிரிவு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
வங்கித் தேர்வுகளுக்கு பயிற்சி அளித்து வரும் தனியார் நிறுவனத்துடன் இணைந்து இப்பயிற்சி வழங்கப்பட உள்ளது. முதல் நிலை தேர்வு, முதன்மைத் தேர்வு என தொடர்ச்சியாக 2 மாதங்களுக்கு ( நாள்தோறும் 2 மணி நேரம்) பயிற்சி வகுப்புகள் சென்னையில் நடைபெறவுள்ளது. இதில் தேர்வுக்கான பாடத் திட்டங்கள், இணைய வழி மாதிரித் தேர்வு முறைகள் ஆகியவை குறித்து இலவசப் பயிற்சி வழங்கப்படும்.
முதலில் விண்ணப்பிக்கும் 50 பேருக்கு மட்டுமே இப்பயிற்சி அளிக்கப்படும். இதில் சேர விரும்புபவர்கள், எஸ்பிஐ அதிகாரி பணிக்கு அனுப்பிய விண்ணப்பத்தின் நகலை ங்ம்ல்ர்ஜ்ங்ழ்.ள்ர்ஸ்ரீண்ஹப்த்ன்ள்ற்ண்ஸ்ரீங்ஃஞ்ம்ஹண்ப்.ஸ்ரீர்ம் என்ற மின்னஞ்சலுக்கு வரும் 23 -ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். பயிற்சி வகுப்புகள் இம்மாத இறுதியில் தொடங்கும். மேலும் விவரங்களுக்கு 93810 07998, 91760 75253 ஆகிய செல்லிடப்பேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.