தீபாவளியையொட்டி, சென்னையில் உள்ள தின்பண்டங்கள் தயாரிப்புக் கடைகளில் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் திங்கள்கிழமை ஆய்வு நடத்தினர்.
தீபாவளியையொட்டி, சென்னையில் இனிப்பு, கார தின்பண்டங்களின் விற்பனை அதிகரித்துள்ளது. உணவுப் பாதுகாப்புத் துறை விதிகளின்படி, இவை தயாரிக்கப்படுகிறதா என்பது குறித்து உணவுப் பாதுகாப்புத் துறை ஆணையர் அமுதா உத்தரவின்பேரில், மேற்கு மாம்பலம், தி.நகர், சைதாப்பேட்டை, நுங்கம்பாக்கம் ஆகிய பகுதிகளில் இயங்கும் 10-க்கும் மேற்பட்ட தின்பண்டங்கள் தயாரிப்புக் கடைகளில் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் சதாசிவம், ஜெயராஜ், சுதாகர் ஆகியோர் திங்கள்கிழமை ஆய்வு நடத்தினர்.
இதுகுறித்து உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் கூறும்போது, இந்த ஆய்வின்போது, தின்பண்டங்கள் தயாரிக்க உரிமம் வாங்கப்பட்டுள்ளதா என்பது குறித்தும், தின்பண்டம் தயாரிக்கப் பயன்படுத்தும் பொருள்களின் தரம், அவை தயாரிக்கும் இடம் ஆகியவை குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது. தரமற்ற இனிப்பு, கார வகைகளை விற்பனை செய்வது தெரியவந்தால் 94440 42322 என்ற எண்ணுக்கு கட்செவி அஞ்சல் மூலம் (வாட்ஸ் அஃப்) புகார் தெரிவிக்கலாம் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








