
சென்னையில் தொடர் குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்த 5 பேர் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
கொரட்டூரை சேர்ந்த ஜெய் (41), சாமுவேல் (23), புரசைவாக்கத்தைச் சேர்ந்த பரத் (28), பாடியை சேர்ந்த ரமேஷ்குமார் (24), ஆழ்வார்திருநகரைச் சேர்ந்த கார்த்திக் (21) ஆகியோர் தொடர் குற்றச் செயல்களில் ஈடுபட்டுவந்தனர்.
இவர்கள்மீது பல்வேறு காவல் நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவர்களை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய சென்னை பெருநகர காவல் ஆணையர் ஏ.கே.விசுவநாதன் உத்தரவிட்டார்.
5 பேரும் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் புதன்கிழமை கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





