ஆசிய விளையாட்டு: மகளிர் கிரிக்கெட்டில் இந்திய அணிக்கு தங்கம்!தமிழ்நாட்டில் அதிகரிக்கும் டெங்கு! இதுவரை 17,348 பேர் பாதிப்பு!தொடர் சரிவில் தங்கம் விலை! இன்றைய நிலவரம்வடகிழக்கு பருவமழை: மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் விஜய் 2-வது நாளாக ஆலோசனை!புதிய சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்தை விடுவிக்க மறுப்புகாமராஜர் காலை உணவுத் திட்டம்: முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்!பொன்னேரியில் மருத்துவமனை ஊழியரை பெட்ரோல் ஊற்றி கொல்ல முயன்றவர் சுட்டுப்பிடிப்புமேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மழை வாய்ப்பு2027 மாா்ச்-க்குள் 1 லட்சம் வீடுகளில் மேற்கூரை சூரியசக்தி மின்சாரம்: நிர்மல்குமாா்தனியாா் பேருந்து கட்டண உயா்வு: தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

105-ஆக உயர்ந்த ராமர் கோயில் முறைகேடுகள்: பின்னணியில் பாஜக? அகிலேஷ் குற்றச்சாட்டு!

அயோத்தி ராமர் கோயில் நன்கொடை முறைகேடு 105 வழக்குகளாக உயர்ந்தது பற்றி..

Akhilesh

அகிலேஷ் யாதவ் - கோப்புப் படம்

Published On :

அயோத்தி ராமர் கோயில் முறைகேடு சம்பவங்களின் எண்ணிக்கை 105-ஆக உயர்ந்துள்ளதாகவும், இந்த முறைகேட்டில் பாஜகவுக்கு தொடர்பு இருப்பதாக சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் குற்றம் சாட்டினார்.

நன்கொடைகள் கையாடல் செய்யப்பட்டதாகக் கூறப்படும் விவகாரத்தை விசாரித்து வரும் நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட சிறப்பு விசாரணைக் குழு, செப்டம்பர் 25 அல்லது அதற்கு முன்னதாக தனது முதல் குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்யவுள்ளதாக உச்ச நீதிமன்றத்திடம் தெரிவித்த மறுநாளே சமாஜ்வாதி கட்சித் தலைவரின் இந்தக் குற்றச்சாட்டு வெளியாகியுள்ளது.

இதுதொடர்பாக அகிலேஷ் வெளியிட்ட எக்ஸ் பதிவில்,

அயோத்தி ராமர் கோயிலில் நன்கொடை, காணிக்கைகள் முறைகேடு நடத்தப்பட்ட விவகாரத்தில் குற்றச் சம்பவம் 70-யிலிருந்து 105 ஆக உயர்ந்துள்ளது. இது மிகவும் கண்டிக்கத்தக்கது. முறைகேடு சம்பவங்கள் சிசிடிவி கேமராக்களில் பதிவாகியுள்ளன.

அரசு மேற்பார்வையில் உள்ள மத நிதியை கையாடல் செய்யும் செயலாகவே இந்த முறைகேடு அமைந்துள்ளன. இச்சம்பவத்தில் பாஜக தலைவர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்புடையவர்கள் ஈடுபட்டுள்ளதாக அயோத்தி முழுவதும் பேசப்பட்டு வருவதொன்றாகும்.

மத நம்பிக்கையில் நன்கொடை வழங்கிய பக்தர்களுக்குத் துரோகம் இழைக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் சநாதன தர்மத்தைப் பின்பற்றுபவர்களிடையே ஆழ்ந்த மனவேதனையை ஏற்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்தார்.

பாஜக மக்கள் நம்பிக்கையை இழந்துவிட்டது. இந்தச் சம்பவத்தால் உத்தரப் பிரதேசம் மட்டுமன்று இந்தியா மற்றும் வெளிநாடுகளிலும் பாஜக கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தியுள்ளது. இனி பாஜகவுக்கு எதிராகத் தர்ம யுத்தம் நடைபெறும். இவ்வாறு அவர் ஹிந்தியில் பதிவிட்டுள்ளார்.

403 உறுப்பினர்களைக் கொண்ட உத்தரப் பிரதேச சட்டப் பேரவைக்கான தேர்தல் 2027-இல் நடைபெறவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.