மாணவர்கள் போராட்டம்: பாஜகவிடம் பதில் இல்லை! அகிலேஷ் யாதவ்மாணவரையே குற்றவாளியாக்கி உண்மையை மறைக்கப் பார்க்கிறதா, தவெக அரசு? - கனிமொழி கேள்வி!வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு: முதல்வர் நாளை தொடக்கி வைக்கிறார்!இரண்டாவது நாளாக சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் நிறவைு!புறக்கணிக்கப்பட்ட அரசுப் பள்ளிகளுக்காக பிரசாரம்! சிஜேபி அபிஜீத் தீப்கே முன்னாள் நீதிபதி யஷ்வந்த் வர்மா மீதான குற்றச்சாட்டுகள் உண்மை! நாடாளுமன்றக் குழு அறிவிப்பு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ. 95.33 ஆக நிறைவு!சென்னையில் 4 மடங்கு உயர்ந்த சொத்து வரி! அதிர்ச்சியில் மக்கள்! குட்டிக்கதை, சினிமா வசனம், பாட்டு: பட்ஜெட் விவாதத்தில் அசத்திய அமைச்சர் மரிய வில்சன்!தமிழ்நாட்டில் இருந்து ஒரு பிரதமர் உருவாக்கப்பட வேண்டும்: பேரவையில் ஆதவ் அர்ஜுன் பேச்சு
/

மாணவர்கள் போராட்டம்: பாஜகவிடம் பதில் இல்லை! அகிலேஷ் யாதவ்

ராமர் கோயில் நன்கொடை முறைகேடு, மாணவர்கள் போராட்டத்தில் தடியடி என எதற்கும் பாஜகவிடம் பதில் இல்லை என அகிலேஷ் யாதவ் பேசியது குறித்து...

News image

அகிலேஷ் யாதவ் - ANI

Updated On :12 ஆகஸ்ட் 2026, 9:29 pm IST

ராமர் கோயில் நன்கொடை முறைகேடு, மாணவர்கள் போராட்டத்தில் தடியடி என எதற்கும் பாஜகவிடம் பதில் இல்லை என சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் இன்று (ஆக. 12) தெரிவித்தார்.

இது தொடர்பாக நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களுடன் அகிலேஷ் யாதவ் பேசியதாவது:

''ராமர் கோயில் நன்கொடை முறைகேடு, மாணவர்கள் போராட்டம் என இரண்டு விவகாரங்கள் குறித்தும் விவாதம் நடைபெற வேண்டும் என்பதே சமாஜவாதி கட்சியின் நிலைப்பாடு.

கல்வி மற்றும் தேர்வு விவகாரத்தில் யாருக்கு எதிராகக் கேள்விகள் எழுப்பப்பட்டன? அல்லது மத நிறுவனங்கள் தொடர்பான விவகாரத்தில் யாருக்கு எதிராகக் கேள்விகள் எழுப்பப்பட்டன? அதனால்தான் இந்த இரண்டு விவகாரங்கள் குறித்தும் விவாதம் நடத்தப்பட வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்.

அரசிடம் இதற்கு பதில்கள் இல்லை. லக்னெளவிலிருந்து வந்த சிறப்புப் புலனாய்வுக் குழுவின் (SIT) அறிக்கையில், அரசு அல்லது பாஜகவுடன் தொடர்புடைய பலரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.

நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் மசோதாக்கள் அனைத்தும் சிறுபான்மையினருக்கு எதிரானதாகவே உள்ளது. வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை சீர்திருத்த மசோதா சிறுபான்மையினரையே குறிவைக்கிறது. இந்த மசோதா அமல்படுத்தப்பட்டால், மற்ற நிதிகளையும் இது பாதிக்கும்'' எனக் குறிப்பிட்டார்.

Summary

Govt has no answers Akhilesh Yadav demands debate on student protests, Ram Temple donations row

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.