அரசுப் பொதுத் தேர்வு மற்றும் திட்டப்பணிகளை கண்காணிக்க பள்ளிக்கல்வித்துறையின் இயக்குநர் மற்றும் இணை இயக்குநர்களை நியமனம் செய்து அதன் செயலாளர் பிரதீப் யாதவ் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அரசாணையில், நிகழாண்டு மார்ச் மாதம் நடைபெற உள்ள அனைத்து அரசுப் பொதுத் தேர்வுகளின் பணிகள் மற்றும் திட்டப் பணிகளை மேற்கொள்ளும் கண்காணிப்பு அதிகாரிகளாக பள்ளிக்கல்வித்துறையை சேர்ந்த இயக்குநர்கள், இணை இயக்குநர்கள் மற்றும் துணை இயக்குநர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை, காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு தொடக்கக் கல்வித்துறை இணை இயக்குநர் பாஸ்கர சேதுபதி, திருவள்ளூர் மாவட்டத்திற்கு ஆசிரியர் தேர்வு வாரிய கூடுதல் உறுப்பினர் சசிகலா, ஈரோடு மாவட்டத்துக்கு பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குநர் நாகராஜ முருகன், வேலூர், திருவண்ணாமலை மாவட்டத்துக்கு பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குநர் கோபிதாஸ் என மாவட்ட வாரியாக அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இன்றைய ராசி பலன்கள் (ஜூன் 1 2026) 12 ராசிகளுக்கும்! விருச்சிக ராசிக்கு மகிழ்ச்சி!

கடக ராசிக்கு இன்று எப்படி? இன்றைய ராசி பலன்கள் (ஜூன் 01)

அவசர கோலத்தின் அவலம்!

மியான்மரில் வெடி விபத்து: 46 போ் பலி
விடியோக்கள்

சோபாவுக்காக ஆசைப்படாத ஒரே கட்சி தேமுதிக! - பிரேமலதா விஜயகாந்த் பேட்டி

#ipl2026 | ஜெயிக்க வேண்டிய தில்லி தோற்றுப் போனது ஏன்? | Delhi Capitals | KL Rahul

”தில்லி பயணத்தில் வெளிப்படை இல்லை?” | அமைச்சர் நிர்மல் குமார் பதில் | TVK


