சாய் விக்னேஷ், நங்கநல்லூர், சென்னை:
நிறைய ஆங்கிலப் புத்தகங்களை வாங்குவதற்காகவே வந்தேன். அதுவும் மிகவும் திட்டமிட்டு வந்தேன். ஓரளவு நான் நினைத்த புத்தகங்களை வாங்க முடிந்தது. டான் ப்ரவுன் எழுதிய டெஸ்டினி அவற்றில் ஒன்று. சேத்தன் பகத்தின் தி கேர்ல் இன்த ரூம் 105 என்ற புத்தகம் பரபரப்பாகப் பேசப்பட்ட புத்தகம். அதை வாங்கியிருக்கிறேன். அமிஷ்பட்டேல் எழுதிய சீதா நான் வாங்கிய இன்னொரு புத்தகம். சிட்னி ஷெல்ட்டனின் ஆடியோ புக், ராபின் கூக் எழுதிய புத்தகங்கள் என நிறைய வாங்கியிருக்கிறேன். சென்ற ஆண்டை விட இந்த ஆண்டு புத்தகக் கண்காட்சி நிறைய இடவசதியுடன் உள்ளது. புத்தகங்களை எளிதாக தேடுவதற்கு வசதியாக உரிய முறையில் அடுக்கி வைத்திருக்கிறார்கள் என்றார்.
பூபதி, செங்கல்பட்டு:
நான் இந்த ஆண்டு ஒரு சில அரசியல் சார்ந்த புத்தகங்களைத் தவிர, முழுக்க முழுக்க இலக்கியம் சார்ந்த புத்தகங்களையே வாங்கியிருக்கிறேன். ஜான் பெர்க்கின்ஸ் எழுதிய ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம் என்ற புத்தகத்தை வாங்கியிருக்கிறேன். பகத்சிங் எழுதிய நான் ஏன் நாத்திகனானேன்? என்ற புத்தகம் என்னைக் கவர்ந்த புத்தகம். அதை வாங்கியிருக்கிறேன். ஸ்வாதி சதுர்வேதி எழுதிய நான் ஒரு ட்ரால் (பிஜேபி டிஜிட்டல் ராணுவத்தின் ரகசிய உலகத்திற்குள்ளே) என்ற புத்தகத்தை வாங்கியிருக்கிறேன். பாலோ கொயலோ எழுதிய ரசவாதி என்ற புத்தகம், எல்.பிராங்போம் எழுதிய மரகதநாட்டு மந்திரவாதி என்ற குழந்தைகள் நூலையும் வாங்கியிருக்கிறேன். சிறுவயதில் விரும்பிப் படித்த முத்து காமிக்ஸ் புத்தகங்களையும் நிறைய வாங்கியிருக்கிறேன். அது எனது சிறுவயது நினைவுகளைத் தூண்டிவிடுகிறது. பெருமாள்முருகன் எழுதிய கூளமாதாரி, கபிரியேல் கார்சியா மார்க்கேஸ் எழுதிய நோபல் பரிசு பெற்ற நாவல் தனிமையின் நூறு ஆண்டுகள் ஆகியவற்றை வாங்கியிருக்கிறேன்.
எனது இலக்கிய ஆர்வத்துக்கு ஏற்ற பல புத்தகங்கள் இந்த புத்தகக் கண்காட்சியில் கிடைத்தது மகிழ்ச்சிக்குரிய விஷயம் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.








