கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே ஆபத்தான முறையில் பரிசலில் மாணவர்கள் ஆற்றைக் கடப்பது குறித்து 4 வாரங்களுக்குள் விளக்கம் அளிக்குமாறு கோவை மாவட்ட ஆட்சியருக்கு மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
மேட்டுப்பாளையத்தை சிறுமுகை அருகே உள்ளது லிங்காபுரம் கிராமம். கடந்த 4 மாதங்களுக்கு முன்பு பில்லூர் அணை திறக்கப்பட்டதால் லிங்காபுரம் கிராமத்தில் உள்ள கரந்தையாற்றைக் கடக்க உதவும் பாலம் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டது.
இதனால் அந்த கிராமத்தைச் சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவர்கள் ஆபத்தான முறையில் பரிசல் மூலம் கரந்தையாற்றைக் கடக்கின்றனர். இதுதொடர்பான செய்தி பத்திரிகை ஒன்றில் அண்மையில் வெளியானது.
தாமாக முன்வந்து வழக்கு: இந்த விவகாரம் தொடர்பாக சென்னையில் உள்ள மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர் நீதிபதி துரை.ஜெயச்சந்திரன் தாமாக முன்வந்து புதன்கிழமை வழக்குப் பதிவு செய்தார். இந்த விவகாரம் தொடர்பாக 4 வாரங்களுக்குள் விளக்கம் அளிக்குமாறு கோவை மாவட்ட ஆட்சியருக்கு நீதிபதி துரை.ஜெயச்சந்திரன் நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அரசின் நடவடிக்கைகளை பொறுத்தே இந்திய கம்யூ. அணுகுமுறை இருக்கும்: மு. வீரபாண்டியன்

குழப்பம் நீங்கும் விருச்சிக ராசிக்கு! இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய ராசி பலன் (மே 17 2026) 12 ராசிகளுக்கும்! தடை நீங்கும் இந்த ராசிக்கு!

தண்டனையைவிட சீா்திருத்தமே அரசின் முதன்மையான நோக்கமாக இருக்க வேண்டும்: உச்சநீதிமன்றம்
விடியோக்கள்

ஆட்சியைக் கலைத்துவிட்டு தேர்தலை சந்திப்பார் விஜய் ? | Ravindran Duraisamy Interview | TVK | CM Vijay
தினமணி செய்திச் சேவை

”விவாகரத்து கிடக்கும் வரை நடிக்கப்போவதில்லை!”: Ravi Mohan பரபரப்பு பேட்டி!
இணையதளச் செய்திப் பிரிவு

மதிய உணவுடன் செயலகம் வரும் முதல்வர்! அமைச்சர் நிர்மல் குமார்
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை
