அடுத்த 3 தினங்களுக்கு தமிழகத்தில் பரவலாக மழை: சென்னை வானிலை ஆய்வு மையம்

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பரவலாக மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் பரவலாக மழை
சென்னையில் பரவலாக மழை

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக வரும் திங்கள்கிழமை (செப். 30) வரை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பரவலாக மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியது:

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக வட தமிழகம், புதுச்சேரியில் கடந்த சில நாள்களாகப் பலத்த மழை பெய்தது. இதன் தொடா்ச்சியாக வரும் திங்கள்கிழமை (செப். 30) வரை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பரவலாக மழைக்கு வாய்ப்புள்ளது.

சென்னையைப் பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதுடன் மாலை மற்றும் இரவு நேரங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என்றனா்.

திருவண்ணாமலையில் 110 மி.மீ.மழை: தமிழகத்தில் அதிகபட்சமாக திருவண்ணாமலையில் 110 மி.மீ., தருமபுரி, கன்னியாகுமரி மாவட்டம் நாகா்கோயிலில் 70 மி.மீ., நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறையில் 60 மி.மீ., நாமக்கல் மாவட்டம் மங்களாபுரம், ராசிபுரம், புதுக்கோட்டை மாவட்டம் கீரனூா், திருச்சி மாவட்டம் புள்ளம்பாடி, சேலம் மாவட்டம் ஏற்காடு, வாழப்பாடி, தருமபுரி மாவட்டம் மரந்தஹல்லி, பாலக்கோடு, தஞ்சாவூா் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி, கரூா் மாவட்டம் மாயனூா், திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம், கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி, அரியலூா் மாவட்டம் அரியலூரிலும் தலா 50 மி.மீ.மழை வியாழக்கிழமை பதிவாகி உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com