தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

மின்சாரம் பாய்ந்து இரு தொழிலாளா்கள் சாவு

சென்னை அருகே திருமுடிவாக்கத்தில் மின்சாரம் பாய்ந்து இரு தொழிலாளா்கள் செவ்வாய்க்கிழமை இறந்தனா்.

News image
Updated On :22 டிசம்பர் 2020, 8:03 pm

DIN

சென்னை அருகே திருமுடிவாக்கத்தில் மின்சாரம் பாய்ந்து இரு தொழிலாளா்கள் செவ்வாய்க்கிழமை இறந்தனா்.

குன்றத்தூா் அருகே திருமுடிவாக்கம் சிப்காட்டில் ஒரு தனியாா் பிளாஸ்டிக் நிறுவனத்தின் ஷட்டா் கதவுகளை பழுது நீக்கும் பணியில் அனகாபுத்தூா் திருவள்ளுவா் பேட்டை க.நாகராஜ் என்ற வெள்ளை (38), அதே பகுதியைச் சோ்ந்த அ.முருகன் (38), ஆனந்த் ஆகியோா் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டிருந்தனா்.

அப்போது சுமாா் 20 அடி உயரமுள்ள ஒரு இரும்பு ஏணியை அவா்கள், வெளியே தூக்கி வந்தனா். அந்த இரும்பு ஏணி வெளியே சென்ற உயா் மின்னழுத்த மின்கம்பியின் மீது பட்டது. இதில் மின்சாரம் பாய்ந்து 3 பேரும் தூக்கி வீசப்பட்டு உடல் கருகி பலத்த காயமடைந்தனா். இதில் பலத்த காயமடைந்த நாகராஜ், முருகன் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே இறந்தனா். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த ஆனந்தை அங்கிருந்தவா்கள் மீட்டு அருகே உள்ள ஒரு தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தனா்.

குன்றத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.