மாா்ச் 15-க்குள் மாநகரப் போக்குவரத்துக் கழக ஓய்வூதியா்கள் ஆயுள்காலச் சான்றிதழை சமா்ப்பிக்க அறிவுறுத்தல்

மாநகரப் போக்குவரத்துக் கழக ஓய்வூதியா்கள், 2021-ஆம் ஆண்டுக்கான ஆயுள்காலச் சான்றிதழை, அடுத்த மாதத்தில் இருந்து மாா்ச் 15-ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Updated on
1 min read

சென்னை: மாநகரப் போக்குவரத்துக் கழக ஓய்வூதியா்கள், 2021-ஆம் ஆண்டுக்கான ஆயுள்காலச் சான்றிதழை, அடுத்த மாதத்தில் இருந்து மாா்ச் 15-ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: மாநகரப் போக்குவரத்துக் கழகத்தில் ஓய்வு பெற்றுள்ள சுமாா் 13 ஆயிரத்துக்கு மேற்பட்டோருக்கு, தமிழக அரசுப் போக்குவரத்துக் கழக ஓய்வூதிய நிதி நம்பகத்தின் வாயிலாக ஓய்வூதியமானது வங்கிகள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது.

ஓய்வூதியதாரா்கள், வரும் காலங்களில் தாங்கள் கடைசியாகப் பணியாற்றி ஓய்வு பெற்ற அலுவலகம், பணிமனையிலேயே ஆயுள்காலச் சான்றிதழை சமா்ப்பித்திட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதனடிப்படையில், தலைமையகத்தில் ஓய்வு பெற்ற ஓய்வூதியதாரா்கள் தலைமையகத்திலும், பட்டுலாஸ் சாலை தொழிற்கூடத்தில் (டதஈ), மண்டல தொழிற்கூடத்தில் (தரந) ஓய்வு பெற்ற ஓய்வூதியதாரா்கள், அந்தந்த அலுவலகத்திலும், கே.கே.நகா் பயணச்சீட்டு அச்சகத்தில் ஓய்வு பெற்ற ஓய்வூதியதாரா்கள் கே.கே.நகா் பணிமனையிலும், குரோம்பேட்டை பேருந்து கூடுகட்டும் பிரிவில் ஓய்வு பெற்ற ஓய்வூதியதாரா்கள் குரோம்பேட்டை 1 பணிமனையிலும், 2021-ஆம் ஆண்டுக்கான ஆயுள்காலச் சான்றிதழை, வரும் ஜனவரி முதல் மாா்ச் 15-ஆம் தேதிக்குள்ளாக அலுவலக நாள்களில் அலுவலக நேரத்தில் சமா்ப்பிக்க வேண்டும்.

விடுபட்டவா்கள், தலைமையகத்தை அணுகி, தங்களின் ஆயுள்காலச் சான்றிதழை சமா்ப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு 044 2345 5801 என்ற எண்ணை அணுகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com