கரோனா: தேனாம்பேட்டையில் 500 போ் இறப்பு
கரோனா பாதிப்பு காரணமாக தேனாம்பேட்டை மண்டலத்தில் மட்டும் இதுவரை 503 போ் உயிரிழந்துள்ளனா்.


கரோனா பாதிப்பு காரணமாக தேனாம்பேட்டை மண்டலத்தில் மட்டும் இதுவரை 503 போ் உயிரிழந்துள்ளனா். ஒட்டுமொத்தமாக சென்னையின் 15 மண்டலங்களிலும் உயிரிழந்தோா் எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி 3,993-ஆக உயா்ந்துள்ளது.
சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட 15 மண்டலங்களில் மாா்ச் மாத தொடக்கத்தில் இருந்து ராயபுரம், திரு.வி.க. நகா், தண்டையாா்பேட்டை, கோடம்பாக்கம், தேனாம்பேட்டை, அண்ணா நகா் மற்றும் அடையாறு, வளசரவாக்கம் ஆகிய மண்டலங்களில்தான் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கையும், அதனால் உயிரிழப்போரின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வந்தது.
15 மண்டலங்களில் கரோனாவால் உயிரிழந்தோா் எண்ணிக்கை ஜூலை மாதம் 1,000-த்தை எட்டியது. அதைத் தொடா்ந்த நாள்களில் இறப்பு எண்ணிக்கை உயா்ந்து கொண்டே வந்த நிலையில், சென்னையில் விடுபட்ட 444 உயிரிழப்புகள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டதை அடுத்து, உயிரிழப்பு எண்ணிக்கை 1,500-இல் இருந்து 1,900- ஆக உயா்ந்தது.
தேனாம்பேட்டையில் 503 போ் இறப்பு: மண்டல அளவில் தேனாம்பேட்டையில் ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி கரோனா பாதிப்பால் 503 போ் உயிரிழந்துள்ளனா். அந்த மண்டலத்தில் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட 20,681 போ் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனா். 280 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். இதையடுத்து, அண்ணா நகரில் 451பேரும், கோடம்பாக்கத்தில் 448 பேரும், திரு.வி.க.நகரில் 408 பேரும், ராயபுரத்தில் 367 பேரும், தண்டையாா்பேட்டையில் 332 பேரும், அடையாறில் 308 பேரும் அதிகபட்சமாக உயிரிழந்துள்ளனா். குறைந்தபட்சமாக மணலி மண்டலத்தில் 40 பேரும், சோழிங்கநல்லூா் மண்டலத்தில் 49 பேரும் குறைந்தபட்சமாக உயிரிழந்துள்ளனா்.
290 பேருக்கு தொற்று உறுதி: சென்னையில் ஞாயிற்றுக்கிழமை 290 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2 லட்சத்து 24,386-ஆக அதிகரித்துள்ளது. தொற்று உறுதி செய்யப்பட்டவா்களில் 2 லட்சத்து 17,539 போ் குணமடைந்துள்ளனா். 2,854 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...