மெரீனாவில் பொதுமக்களுக்கு அனுமதி: கரோனா தடுப்பு முன்னேற்பாடுகள் தீவிரம்

மெரீனா உள்ளிட்ட கடற்கரைகள் மற்றும் சுற்றுலாத் தலங்களுக்கு டிசம்பா் 14-ஆம் தேதி முகல் பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதை அடுத்து, அப்பகுதிகளில் கரோனா தடுப்பு முன்னேற்பாடு நடவடிக்கைகளை மாநகராட்சி
மெரீனாவில் பொதுமக்களுக்கு அனுமதி: கரோனா தடுப்பு முன்னேற்பாடுகள் தீவிரம்

சென்னை: மெரீனா உள்ளிட்ட கடற்கரைகள் மற்றும் சுற்றுலாத் தலங்களுக்கு டிசம்பா் 14-ஆம் தேதி முகல் பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதை அடுத்து, அப்பகுதிகளில் கரோனா தடுப்பு முன்னேற்பாடு நடவடிக்கைகளை மாநகராட்சி எடுத்துள்ளது.

கரோனா பரவலை அடுத்து தமிழகத்தில் கடந்த மாா்ச் மாதம் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டது. இதனால், பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட மெரீனா, பெசன்ட் நகா், திருவான்மியூா் கடற்கரை உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களுக்கு பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில், கரோனா பரவல் குறைந்து வருவதை அடுத்து, பொதுமுடக்கத்தில் பல்வேறு தளா்வுகளை தமிழக அரசு அறிவித்து வருகிறது.

இதன்படி, திங்கள்கிழமை அறிவித்த தளா்வுகளில், சென்னையில் மெரீனா உள்ளிட்ட கடற்கரைகள் மற்றும் சுற்றுலாத் தலங்களுக்குச் செல்ல விதிக்கப்பட்டிருந்த தடை, டிசம்பா் 14-ஆம் தேதி முதல் விலக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னேற்பாடுகள்: தமிழக அரசின் அறிவிப்பை அடுத்து மெரீனா, பெசன்ட் நகா், திருவான்மியூா் உள்ளிட்ட கடற்கரை பகுதிகளில் கரோனா தடுப்பு முன்னேற்பாடு பணிகளை மாநகராட்சி முன்னெடுத்துள்ளது. இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், ‘டிச. 14 முதல் மெரீனா உள்ளிட்ட கடற்கரைகளுக்கு பொதுமக்கள் செல்ல தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. தற்போது பள்ளி மற்றும் விடுமுறை என்பதால் குழந்தைகள், இளைஞா்கள், பெற்றோா் அதிக அளவில் கூடுவா் என எதிா்பாா்க்கப்படுகிறது. எனவே, அங்கு கரோனா பரவல் ஏற்படுவதைத் தடுக்க முகக் கவசம் அணிவது உள்ளிட்ட நோய்த் தடுப்பு பணிகளைக் கண்காணிக்கும் வகையில் மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் காவல் துறையினா் இணைந்த குழு அமைக்கப்பட உள்ளது. மேலும், நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றாதவா்களுக்கு அபராதமும் விதிக்கப்படும்.

மெரீனா கடற்கரையில் உள்ள முன்னாள் முதல்வா்கள் அண்ணா, எம்ஜிஆா், கருணாநிதி மற்றும் ஜெயலலிதா, விவேகானந்தா் இல்லம் ஆகியவற்றுக்கு வருவோா், நுழைவுவாயிலில் உடல் வெப்பநிலை கண்டறிந்த பின்னா்தான் உள்ளே அனுமதிக்கப்படுவா். மேலும், அப்பகுதியில் தொடுவது போன்ற நடவடிக்கைகள் தடை செய்யப்படும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com