தமிழகத்தின் தியாக தீபங்கள் டி.எம்.மூக்கன் ஆசாரி - 5

"ஆங்கிலம் கற்றவர்களின் அமைப்பாகவே ஆரம்ப காலத்தில் காங்கிரஸ் விளங்கியது என்று ஒரு பொதுக் கருத்து நிலவியது. முதல் இரு காங்கிரஸýகளைப் பொருத்தவரையில் இது உண்மையாக இருக்கலாம்.
தமிழகத்தின் தியாக தீபங்கள் டி.எம்.மூக்கன் ஆசாரி - 5
Updated on
1 min read


"ஆங்கிலம் கற்றவர்களின் அமைப்பாகவே ஆரம்ப காலத்தில் காங்கிரஸ் விளங்கியது என்று ஒரு பொதுக் கருத்து நிலவியது. முதல் இரு காங்கிரஸýகளைப் பொருத்தவரையில் இது உண்மையாக இருக்கலாம். ஆனால் 1887 சென்னை காங்கிரûஸப் பொருத்தவரையில் அவ்வாறு இல்லை' என்று வங்காள வரலாற்று ஆய்வாளர்களான பிமேன் பிஹாரி மஜூம்தார், பக்த பிரசாத் மஜூம்தார் ஆகியோர் பதிவு செய்துள்ளனர்.
இவ்வாறான குறிப்புக்கு மூன்றாவது காங்கிரஸில் கும்பகோணத்திலிருந்து மாநாட்டுப் பிரதிநிதியாக வந்திருந்த டி.எம்.மூக்கன் ஆசாரி என்ற கைவினைஞர் தமிழில் நிகழ்த்திய  உரைதான் காரணமாக இருந்துள்ளது.
மூன்றாவது காங்கிரஸில் மொத்தம் 17 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அவற்றுள் 7}ஆவது தீர்மானம் தொழிற்கல்வியைப் பற்றியது. இத்தீர்மானத்தின் மீதான விவாதத்தில்தான் மூக்கன் ஆசாரி உரையாற்றினார். எடுத்தியம்பிய மொழியினால் மட்டுமல்லாது, அவர் எடுத்துரைத்த வித்தியாசமான பொருளாழம் மிக்க கருத்துகளாலும் அவ்வுரை பெரும் பாராட்டைப் பெற்றது.
மூக்கன் ஆசாரி நிகழ்த்திய தமிழ் உரையின் மூலம் கிடைக்கவில்லை. ஆங்கிலேயரான காங்கிரஸின் தலைவர் எ.ஓ.ஹ்யூம், மூக்கன் ஆசாரியின் தமிழ் உரையை உரியவர்களைக் கொண்டு அப்போதே ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வைத்திருந்துள்ளார்.
இந்த ஆங்கில மொழிபெயர்ப்போடு உரையாளரைப் பற்றி "ஐரோப்பாவில் கல்வி எனக் கூறத்தக்க எந்தக் கல்வியையும் கைவினைஞர் பெற்றவரில்லை. இந்த நற்குடியாளர், தஞ்சாவூர் முனிசபல் சபையின் உறுப்பினர் என்ற வகையில் நாளும் ஓயாது உழைப்பவர். பொதுமக்களுக்குத் தொண்டு புரிவதில் கருத்தாய் இருப்பவர்.  தஞ்சாவூர் மாவட்டம் முழுவதும் இருந்து கும்பகோணத்தில் கூடிய கைவினைஞர்கள் கூட்டத்தில் இவரும் மற்ற இருவரும் முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்' என்ற குறிப்பும் இணைக்கப்பட்டுள்ளது.
"நமது நாடு இன்று நெருக்கடியான நிலையில் உள்ளது. வரி விதிப்பு உயர்ந்துவிட்டது. முறையான முன்னேற்றத்திற்கான மூலாதாரங்கள் பற்றாக்குறையாக உள்ளன. இந்த நாட்டின் செல்வம் தொடர்ந்தாற்போல வெளியேறிக்கொண்டிருக்கிறது' என்று உணர்ச்சிப்பொங்கப் பேசிய மூக்கன் ஆசாரி "தொழிற்கல்வி நிலையங்கள் நாடெங்கும் நிறுவப்பட்டு நன்கு நடத்தப்பட வேண்டும். இந்தியர்களுக்குத் தேவைப்படும் இயந்திரப் பொருள்கள் இங்கேயே உற்பத்தி செய்யப்பட வேண்டும். இவ்வாறு உற்பத்தியில் ஈடுபடுபவர்களுக்குப் பயிற்சி, செயல்முறைகளைப் பற்றிய படிப்பு முதலானவற்றிற்கு இங்கேயே ஏற்பாடு செய்ய வேண்டும்'என்று முழங்கினார்.
நீதிபதிகள், உத்தியோகஸ்தர்கள் என்று இந்தியர்கள் ஆயிரக்கணக்கானோர் உயர்பதவிகளை அலங்கரிப்பது நாட்டின் வளர்ச்சிக்கு எவ்வகையிலும் பலன் தராது என்றும், தொழில் துறையின் முன்னேற்றம்தான் நாட்டின் அனைத்து வகை வளர்ச்சிக்கும் அடிப்படையென்றும், இதனை நோக்கி அரசின் கவனத்தை ஈர்ப்பதுதான் அம்மாநாட்டின் முழுமுதல் நோக்கமாக இருக்க வேண்டுமென்றும் அழுத்தம் திருத்தமாகப் பேசினார் மூக்கன் ஆசாரி.
மூக்கன் ஆசாரியிடமிருந்து ஒலித்தது தமிழ்க் குரல் மட்டுமல்ல,  தன்மானக் குரலுமாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com