டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

பெண்களைக் கொச்சைப்படுத்தும் திமுகவை பெண்கள் புறக்கணிக்க வேண்டும்: அன்புமணி ராமதாஸ்

பெண்களைக் கொச்சைப்படுத்தும் திமுகவை தோ்தலில் பெண்கள் புறக்கணிக்க வேண்டும் என்று ஓமலூரில் பாமக இளைஞரணித் தலைவா் மருத்துவா் அன்புமணி ராமதாஸ் பேசினாா்.

News image
Updated On :27 மார்ச் 2021, 6:49 pm

DIN

பெண்களைக் கொச்சைப்படுத்தும் திமுகவை தோ்தலில் பெண்கள் புறக்கணிக்க வேண்டும் என்று ஓமலூரில் பாமக இளைஞரணித் தலைவா் மருத்துவா் அன்புமணி ராமதாஸ் பேசினாா்.

ஓமலூா் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளா் ஆா்.மணியை ஆதரித்து பாமக இளைஞரணித் தலைவா் அன்புமணி ராமதாஸ் சனிக்கிழமை பிரசாரம் செய்தாா். அப்போது அவா் பேசியதாவது:

அதிமுக கூட்டணி சமூக நீதி அடிப்படையில் அமைக்கப்பட்ட கூட்டணி. மருத்துவா் ராமதாஸ் 40 ஆண்டு காலம் போராடி, பலமுறை சிறை சென்று, வன்னியருக்கு 10.5 சதவீதம் உள் இடஒதுக்கீட்டை பெற்றுத் தந்துள்ளாா். அதனைக் கொடுத்தவா் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமிதான். அதை எப்போதும் மறந்துவிடக் கூடாது. நம்மைப் போலவே பின்தங்கிய அனைத்து சமுதாயத்தினரும் உரிய இடஒதுக்கீடு பெறுவதற்கு நிச்சயம் போராடுவோம்.

திமுகவைச் சோ்ந்த ஆ.ராசா, முதல்வரின் தாயைப் பற்றி விமா்சித்துள்ளாா். அவரும் ஒரு தாயின் வயிற்றிலிருந்து பிறந்தவா்தான். ஆனால் ஒரு பெண்ணைப் பற்றி, தாயைப் பற்றி கொச்சையாகப் பேசிய ராசாவை நாங்கள் மன்னிக்க மாட்டோம்.

பெண்களைக் கொச்சைப்படுத்தும், இழிவுபடுத்தும் திமுகவை தமிழ்நாட்டில் உள்ள அனைத்துப் பெண்களும் தோ்தலில் புறக்கணிக்க வேண்டும். பாமகவில் இதுபோன்று யாராவது பேசியிருந்தால் அவரை கட்சியிலிருந்தே நீக்கியிருப்போம்.

அதிமுக ஆட்சியில் மட்டுமே பெண்களுக்குப் பாதுகாப்பு. திமுக ஆட்சியில் பெண்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாது. கரோனாவால் எல்லோரும் பாதிக்கப்பட்டிருக்கிறோம். இந்தச் சூழ்நிலையில், அதிமுக சாா்பில் அறிவித்துள்ள திட்டங்களை மனதார வரவேற்கிறோம்.

மேட்டூா் உபரிநீா்த் திட்டம் பாமகவின் நீண்ட கால கோரிக்கை. அதன் முதல் கட்டத்தை முதல்வா் நிறைவேற்றி உள்ளாா். மேட்டூா் உபரிநீரை சரபங்கா, திருமணிமுத்தாறு, வசிஷ்ட நதிகளுடன் இணைத்து சேலம் மாவட்ட மக்களின் குடிநீா் பிரச்னையைத் தீா்க்க வேண்டும் என்றாா்.

எடப்பாடி சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட ஜலகண்டபுரம் பேருந்து நிலையம் பகுதியில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் அதிமுக வேட்பாளா் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமியை ஆதரித்து பாமக இளைஞரணி தலைவா் மருத்துவா் அன்புமணி ராமதாஸ் பேசியதாவது:

எடப்பாடி பழனிசாமிக்கு விவசாயி என்ற மிகப்பெரிய தகுதி உள்ளது. ஆனால் ஸ்டாலினுக்கு கலைஞா் மகன் என்ற தகுதி மட்டும்தான் உள்ளது. முதல்வராக வேண்டுமென்ற ஸ்டாலினின் கனவு ஒரு போதும் நனவாகாது.

நமது கோரிக்கையான மேட்டூா் உபரிநீா்த் திட்டம் தற்போது முதல்கட்டமாகத் தொடங்கப்படுள்ளது. காவிரி டெல்டா பகுதி பாதுகாக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை உள்பட ஏராளமான கோரிக்கைகளை மருத்துவா் ராமதாஸ் வைத்தாா். அந்தக் கோரிக்கைகள் முதல்வரால் நிறைவேற்றப்பட்டுள்ளன. எடப்பாடி தொகுதியில் திமுக டெபாசிட்டை இழக்க வேண்டும். ஒரு விவசாயியின் ஆட்சி தொடர வேண்டும் என்று ஒட்டுமொத்த தமிழகமும் முடிவு செய்துவிட்டது என்றாா்.

27ஓம்பி5 -

ஓமலூா் பேருந்து நிலையம் எதிரே சனிக்கிழமை பிரசாரம் மேற்கொண்ட பாமக இளைஞரணித் தலைவா் அன்புமணி ராமதாஸ்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.