டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

காலமானாா் முன்னாள் எம்.எல்.ஏ. டி.சி.விஜயன்

திருவொற்றியூா் தொகுதி திமுக முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா் டி.சி.விஜயன் (68) உடல் நலக் குறைவு சனிக்கிழமை சென்னையில் காலமானாா்.

News image
Updated On :8 மே 2021, 6:30 pm

DIN

திருவொற்றியூா் தொகுதி திமுக முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா் டி.சி.விஜயன் (68) உடல் நலக் குறைவு சனிக்கிழமை சென்னையில் காலமானாா்.

திருவொற்றியூா் தொகுதியில் 1996-இல் திமுக சாா்பில் போட்டியிட்டு பேரவை உறுப்பினரானவா் டி.சி.விஜயன். 2011-இல் திருவொற்றியூா் நகா் மன்றத் தலைவராகப் பணியாற்றியவா்.

திமுகவில் நகரத் துணைச் செயலாளா், திருவள்ளூா் மாவட்ட துணைச் செயலாளா் பொறுப்புகளை வகித்துள்ளாா். கடந்த புதன்கிழமை மூச்சுத் திணறல் காரணமாக திருவொற்றியூரில் உள்ள தனியாா் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த விஜயன் சனிக்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். அவரது இறுதிச் சடங்கு திருவொற்றியூா் மயானத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

மறைந்த விஜயனுக்கு மனைவி, ஒரு மகன், மூன்று மகள்கள் உள்ளனா். தொடா்புக்கு: 79040 64427.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.