/

சென்னையில் கரோனா தொற்று மீண்டும் அதிகரிக்கிறதா? புள்ளிவிவரம் சொல்வதென்ன?

சென்னையில் புதன்கிழமை காலை நிலவரப்படி, 1,794 பேர் கரோனா பாதித்து சிகிச்சையில் உள்ளனர். நேற்று ஒரே நாளில் 156 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

News image
சென்னையில் கரோனா தொற்று மீண்டும் அதிகரிக்கிறதா? புள்ளிவிவரம் சொல்வதென்ன?
Updated On :20 அக்டோபர் 2021, 6:57 am

DIN

சென்னையில் புதன்கிழமை காலை நிலவரப்படி, 1,794 பேர் கரோனா பாதித்து சிகிச்சையில் உள்ளனர். நேற்று ஒரே நாளில் 156 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுவரை ஒட்டுமொத்தமாக கரோனா பாதித்தோர் எண்ணிக்கை 5,52,773 ஆகவும், குணமடைந்தோர் எண்ணிக்கை 5,42,453 ஆகவும் பலி எண்ணிக்கை 8,526 ஆகவும் உள்ளது.

Story image

சென்னையிலேயே அதிகபட்சமாக     தேனாம்பேட்டையில் 180 கரோனா நோயாளிகள் உள்ளனர். குறைந்தபட்சமாக மணலியில் 21 பேர் உள்ளனர். 

சென்னையில் கரோனா தொற்று கூடவும் இல்லை, மகிழ்ச்சி அடையும் வகையில் குறையவும் இல்லை.  அதாவது, இம்மாத துவக்கத்தில் அக்டோபர் 5ஆம் தேதி சென்னையில் ஒரு நாள் கரோனா பாதிப்பு 179 ஆக இருந்த நிலையில் 15 நாள்களுக்குப் பின் தற்போது அது 156 ஆக உள்ளது. இது  18ஆம் தேதி மட்டும் இது 150 ஆகக் குறைந்ததால், நேற்று மீண்டும் 156 ஆனதால் அதிகரித்ததாகக் கூறப்பட்டது.

எனினும், சென்னையில் அக்டோபர் மாதத்தில் கரோனா பாதிப்பு மிக குறைந்த அளவில் குறைந்து வருவதையே இது காட்டுகிறது. 

புள்ளிவிவரம்
சென்னையில் ஒரு நாள் பாதிப்புப் பட்டியல்
19அக்.: 156
18அக்.: 150
17அக்.: 156
16அக்.: 160
15அக்.: 167
14அக்.: 163
13அக்.: 173
12அக்.: 164
11அக்.: 168
10அக்.:  171
09அக்.: 164
08அக்.: 169
07அக்.: 173
06அக்.: 176
05அக்.: 179
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.