ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

கிண்டி அருகே கொடுத்த பணத்தை கேட்டவர் மீது தாக்குதல்: ஒருவர் கைது

கிண்டி அருகே கடன் கொடுத்த பணத்தை திரும்ப கேட்டபோது ஏற்பட்ட தகராறில் கத்தியால் தாக்கி கொலை முயற்சி செய்த நபர் கைது செய்யப்பட்டார்.

News image
பெங்களூருவில் பயங்கரம்: ஒரே குடும்பத்தில் 5 பேர் தற்கொலை; குழந்தை உயிருடன் மீட்பு
Updated On :22 செப்டம்பர் 2021, 10:42 am

DIN

சென்னை, கிண்டி அருகே கடன் கொடுத்த பணத்தை திரும்ப கேட்டபோது ஏற்பட்ட தகராறில் கத்தியால் தாக்கி கொலை முயற்சி செய்த நபர் கைது செய்யப்பட்டார்.

சென்னை, ஈக்காட்டுதாங்கல், பிள்ளையார் கோயில் தெருவில் வசிக்கும் கண்ணன் சுமார் 2 வருடங்களுக்கு முன்பு, அதே பகுதியைச் சேர்ந்த தண்ணீர் கேன் சப்ளை செய்து வரும் பாண்டியன்,  என்பவருக்கு ரூ.2 லட்சம் பணம் கடனாக கொடுத்துள்ளார்.

இதுவரையில் பாண்டியன் வாங்கிய கடன் பணத்தை திரும்ப தராத நிலையில், தேவி அவரது கணவர் கண்ணனுடன் சேர்ந்து கடந்த 20.9.2021 அன்று மதியம், பாண்டியனிடம் சென்று தனது பணத்தை திரும்ப தருமாறு கேட்டுள்ளனர். 
அப்பொழுது பாண்டியனுக்கும், தேவி தரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், வாக்குவாதம் முற்றி பாண்டியன் அருகிலிருந்த கத்தியை எடுத்து, கண்ணனை தாக்கியுள்ளார்.

இதில் இரத்தக் காயமடைந்த கண்ணனை, தேவி அருகிலிருந்தவர்கள் உதவியுடன் மீட்டு மருத்துவமனையில் சேர்த்ததின்பேரில், அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது தொடர்பாக தேவி கொடுத்த புகாரின்பேரில் கிண்டி காவல் நிலையத்தில் கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து, பாண்டியன் கைது செய்யப்பட்டார்.  அவரிடமிருந்து 1 கத்தி பறிமுதல் செய்யப்பட்டது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.