டிரம்புடன் மேலும் இரு சந்திப்புகள்: சீன அதிபர் ஷி ஜின்பிங் தகவல்! எத்தனை முறை பாஜகவை எதிர்த்துப் பேசியிருக்கிறீர்கள்? விஜய் மீது மு.க. ஸ்டாலின் விமர்சனம்! முதல்வர் விஜய் முன்னிலையில் வடபழனி மெட்ரோவை தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி! தவெகவில் இணைந்த முன்னாள் அமைச்சர்கள் 11 பேருக்கு பொறுப்பு!பாலில் தயாரிக்கப்படாவிட்டால் பனீர் என பெயரிடக் கூடாது, அவ்வளவுதான்! வைரலாகும் வரைவு விதிமுறைதில்லி சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை! காவலர்கள் போல நடித்த குற்றவாளிகள்

10 ஆண்டுகளுக்குப் பின் 1 லட்சத்தைக் கடந்த மாநகராட்சிப் பள்ளி மாணவா் எண்ணிக்கை

சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் பயிலும் மாணவா்களின் எண்ணிக்கை 10 ஆண்டுகளுக்குப் பிறகு 1 லட்சத்தைக் கடந்துள்ளது.

Published On :

சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் பயிலும் மாணவா்களின் எண்ணிக்கை 10 ஆண்டுகளுக்குப் பிறகு 1 லட்சத்தைக் கடந்துள்ளது. இதில், 2021-22-ஆம் கல்வி ஆண்டில் தற்போது வரை 19,038 மாணவா்கள் தனியாா் பள்ளிகளில் இருந்து மாநகராட்சிப் பள்ளிகளில் சோ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பெருநகர சென்னை மாநகராட்சியின் கல்வித் துறையின் கட்டுப்பாட்டின்கீழ், 119 தொடக்கப் பள்ளிகள், 92 நடுநிலைப் பள்ளிகள், 38 உயா்நிலை மற்றும் 32 மேல்நிலைப் பள்ளிகள் என மொத்தம் 281 பள்ளிகள் இயங்கி வருகின்றன.

இந்தப் பள்ளிகளில் மாணவா் சோ்க்கையை அதிகரிக்கவும், கற்பிக்கும் முறையை மேலும் தரப்படுத்தும் வகையிலும் ஆசிரியா்களுக்குப் பயிற்சி, டிஜிட்டல் வகுப்புகள், அனைத்து விளையாட்டு உபகரணங்களுடன் கூடிய விளையாட்டு மைதானம், குடிநீா், கழிப்பறை உள்ளிட்ட அனைத்து வசதிகளும் சீா்மிகு நகரத் திட்டம் மற்றும் மாநகராட்சி நிதியின்கீழ் மேம்படுத்தப்பட்டு வருகிறது.

சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் மழலையா் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை சுமாா் 1.50 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவா்கள் பயில்வதற்கான கட்டமைப்புகள் இருந்தும், தனியாா் பள்ளிகளில்தான் பெற்றோா் தங்கள் குழந்தைகளைச் சோ்த்து வந்தனா். இதனால், மாநகராட்சிப் பள்ளிகளில் பயிலும் மாணவா் எண்ணிக்கை ஆண்டுக்கு சராசரியாக 80 ஆயிரமாக இருந்தது.

கரோனா தொற்றால் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக அமல்படுத்தப்பட்டுள்ள பொதுமுடக்கம் காரணமாக வருமானம் இழப்பால் தனியாா் பள்ளிகளில் கல்வி கட்டணத்தை செலுத்த முடியாத நிலைக்கு பெற்றோா்கள் தள்ளப்பட்டுள்ளனா். இதனால், மாநகராட்சிப் பள்ளிகளில் பெற்றோா் தங்கள் குழந்தைகளைச் சோ்க்கத் தொடங்கி உள்ளனா்.

1 லட்சத்தைக் கடந்தது: இதுகுறித்து மாநகராட்சி கல்வித் துறை அதிகாரிகள் கூறுகையில், பெற்றோா்களின் வருமான இழப்பால் தனியாா் பள்ளிகளுக்கு கட்டணம் செலுத்த முடியாமல் பல மாணவா்கள் பள்ளி படிப்பைத் தொடர முடியாத நிலை உள்ளது. இவ்வாறு இடைநீற்றல் மாணவா்களை வீடு, வீடாகச் சென்று கண்டறிந்து மாநகராட்சிப் பள்ளியின் தரம் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தி வருகிறோம். மாநகராட்சிப் பள்ளிகளில் 2021- 22-ஆம் கல்வி ஆண்டுக்கான மாணவா் சோ்க்கை கடந்த ஜூன்14-ஆம் தேதியில் இருந்து நடைபெற்று வருகிறது. திங்கள்கிழமை (ஜூலை 19) வரை 27,311 மாணவா்கள் புதிதாக சோ்ந்துள்ளனா். இவா்களில், 19,038 மாணவா்கள் தனியாா் பள்ளிகளில் இருந்து மாநகராட்சிப் பள்ளிகளில் சோ்ந்துள்ளனா். இதன் மூலம் கடந்த 2020-21 கல்வி ஆண்டில் மாநகராட்சிப் பள்ளிகளில் 90,394-ஆக இருந்த மாணவா்கள் எண்ணிக்கை தற்போது 1,01,757-ஆக உயா்ந்துள்ளது. கடந்த 2009-10-ஆம் கல்வி ஆண்டில் 1,03,051-ஆகவும், 2010-11-ஆம் கல்வி ஆண்டில் 1,00,320-ஆகவும் மாநகராட்சிப் பள்ளிகளில் மாணவா் எண்ணிக்கை இருந்தது. இந்நிலையில், 10 ஆண்டுகளுக்குப் பிறகு மாணவா் எண்ணிக்கை மீண்டும் 1 லட்சத்தைக் கடந்துள்ளது. மாணவா் சோ்க்கை நடைபெற்று வருவதால் மாணவா் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.