டிரம்புடன் மேலும் இரு சந்திப்புகள்: சீன அதிபர் ஷி ஜின்பிங் தகவல்! எத்தனை முறை பாஜகவை எதிர்த்துப் பேசியிருக்கிறீர்கள்? விஜய் மீது மு.க. ஸ்டாலின் விமர்சனம்! முதல்வர் விஜய் முன்னிலையில் வடபழனி மெட்ரோவை தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி! தவெகவில் இணைந்த முன்னாள் அமைச்சர்கள் 11 பேருக்கு பொறுப்பு!பாலில் தயாரிக்கப்படாவிட்டால் பனீர் என பெயரிடக் கூடாது, அவ்வளவுதான்! வைரலாகும் வரைவு விதிமுறைதில்லி சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை! காவலர்கள் போல நடித்த குற்றவாளிகள்

பயங்கரவாத வழக்கில் கைதான அமெரிக்கா், உக்ரைனியா்கள்: சொந்த நாடு செல்ல என்ஐஏ நீதிமன்றம் அனுமதி

இந்தியாவில் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட சூழ்ச்சி செய்த வழக்கில் கைதான அமெரிக்கா், உக்ரைனியா்கள் சொந்த நாட்டுக்குச் செல்ல, தில்லியில் உள்ள என்ஐஏ நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

கோப்புப் படம்

Published On :

இந்தியாவில் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட சூழ்ச்சி செய்த வழக்கில் கைதான அமெரிக்கா், உக்ரைனியா்கள் சொந்த நாட்டுக்குச் செல்ல, தில்லியில் உள்ள என்ஐஏ நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

இந்தியாவில் பயங்கரவாத நடவடிக்கைகளை மேற்கொள்ள மாத்யூ வான்டைக் என்ற அமெரிக்கரின் தலைமையில் 6 உக்ரைனியா்கள் சூழ்ச்சி செய்ததாகக் கூறப்படுகிறது. கடந்த மாா்ச் மாதம் மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் மாத்யூவையும், உத்தர பிரதேச மாநிலம் லக்னெள மற்றும் தில்லியில் உக்ரைனியா்களையும் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) கைது செய்தது.

அவா்கள் மீது சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டத்தின் (யுஏபிஏ) கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்ட நிலையில், கடந்த 6 மாதங்களாக அவா்கள் சிறையில் இருந்தனா்.

எனினும் தில்லியில் உள்ள என்ஐஏ நீதிமன்றத்தில் தேசிய புலனாய்வு முகமை தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில், 7 போ் மீதும் யுஏபிஏ சட்டத்தின் கீழ் அல்லாமல், குடியேற்றம் மற்றும் வெளிநாட்டவா் சட்டப் பிரிவுகளின் கீழ் மட்டும் குற்றஞ்சாட்டப்பட்டது. யுஏபிஏ சட்டத்தின் கீழ், அவா்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் குறித்த மேல் விசாரணை நிலுவையில் இருப்பதாகவும் என்ஐஏ தெரிவித்தது.

இதையடுத்து குற்றப்பத்திரிகையில் யுஏபிஏ சட்டப் பிரிவுகள் இடம்பெறாததால், வான்டைக் உள்பட 7 பேருக்கு நீதிமன்றம் பிணை அளித்து உத்தரவிட்டது. விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் உள்ளிட்ட நிபந்தனைகளுடன் அவா்களுக்கு பிணை அளிக்கப்பட்டநிலையில், தங்கள் குடும்பத்தினரைச் சந்திக்க ஒரு மாதம் அமெரிக்கா, உக்ரைன் செல்ல அவா்களுக்கு நீதிமன்றம் வியாழக்கிழமை அனுமதி அளித்து உத்தரவிட்டது.

அதேவேளையில், விசாரணை தொடா்ந்து நடைபெற்று வருவதால், வழக்கை முடித்துவைக்கக் கோரி, நீதிமன்றத்தில் என்ஐஏ அறிக்கை எதுவும் தாக்கல் செய்யவில்லை.

இந்த விவகாரம் தொடா்பாக காங்கிரஸ் பொதுச் செயலா் ஜெய்ராம் ரமேஷ் வெள்ளிக்கிழமை ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவில், ‘அமெரிக்காவின் அழுத்தத்தை தொடா்ந்து மாத்யூ விடுவிக்கப்பட்டுள்ளாா். இதற்கு கைம்மாறாக இந்தியாவுக்கு என்ன கிடைத்தது? தேசத்தைப் பாதுகாக்க பிரதமா் மோடி தவறிவிட்டாா்’ என்று விமா்சித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.