தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

சென்னையில் கரோனா தடுப்பூசி, கரோனா நோயாளிகளின் முழு நிலவரம்

சென்னையில் இதுவரை ஒட்டுமொத்தமாக கரோனா தடுப்பூசி செலுத்தியவர்களின் விவரம் மற்றும் கரோனா நோயாளிகளின் விவரங்களை விரிவாகப் பார்க்கலாம்.

News image
சென்னையில் கரோனா தடுப்பூசி, கரோனா நோயாளிகளின் முழு நிலவரம்
Updated On :22 செப்டம்பர் 2021, 6:27 am

DIN


சென்னை: சென்னையில் இதுவரை ஒட்டுமொத்தமாக கரோனா தடுப்பூசி செலுத்தியவர்களின் விவரம் மற்றும் கரோனா நோயாளிகளின் விவரங்களை விரிவாகப் பார்க்கலாம்.

சென்னையில் செப்டம்பர் 21ஆம் தேதி வரை ஒட்டுமொத்தமாக 48,94,362 கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. அதில், செப்டம்பர் 21ஆம் தேதி மட்டும் 14,020 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

இதில், 36.50 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகளும், 12.43 லட்சம் கோவாக்ஸின் தடுப்பூசிகளும் செலுத்தப்பட்டுள்ளன.

கரோனா நோயாளிகள் எத்தனை பேர்?

சென்னையில் செப்டம்பர் 22ஆம் தேதி காலை நிலவரப்படி 2,055 பேர் கரோனா பாதித்து சிகிச்சை பெற்று வருகின்றனர். 

Story image

ஒட்டுமொத்தமாக கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 5.48 லட்சமாக உள்ளது. இவர்களில் 5.37 லட்சம் பேர் குணமடைந்துவிட்டனர். 8,450 பேர் கரோனாவுக்கு பலியாகிவிட்டனர்.

சென்னையில் உள்ள 15 மண்டலங்களில், அதிகபட்சமாக அண்ணாநகர் (207), தேனாம்பேட்டையில் (213) கரோனா நோயாளிகள் உள்ளன. சென்னையில் கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 1,700 என்ற அளவிலேயே இருந்த நிலையில் தற்போது இது 2 ஆயிரத்தை எட்டியுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.