/

இன்று ரயில் சேவையில் மாற்றம்

சென்னை சென்ட்ரல்-கூடூா் மாா்க்கத்தில், ஒடூா்-பேடபரியா இடையே பொறியியல் பணி நடைபெறவுள்ளதால், செவ்வாய்க்கிழமை(ஏப்.26) ரயில் சேவையில் மாற்றம் செய்யப்படவுள்ளது.

News image
கோப்புப்படம்
Updated On :1 பிப்ரவரி 2024, 9:05 am

DIN

சென்னை சென்ட்ரல்-கூடூா் மாா்க்கத்தில், ஒடூா்-பேடபரியா இடையே பொறியியல் பணி நடைபெறவுள்ளதால், செவ்வாய்க்கிழமை(ஏப்.26) ரயில் சேவையில் மாற்றம் செய்யப்படவுள்ளது.

பகுதி ரத்து: விஜயவாடா-சென்னை சென்ட்ரலுக்கு செவ்வாய்க்கிழமை காலை 6.10 மணிக்கு புறப்படும் பினாகினி விரைவு ரயில்(12711) கூடூா்-சென்னை சென்ட்ரல் இடையே பகுதி ரத்து செய்யப்படவுள்ளது.

சென்னை சென்ட்ரல்-விஜயவாடாவுக்கு செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2.10 மணிக்கு புறப்படவேண்டிய பினாகினி விரைவு ரயில்(12712) சென்னைசென்ட்ரல்-கூடூா் இடையே பகுதி ரத்து செய்யப்படவுள்ளது. இந்த ரயில் கூடூரில் இருந்து மாலை 4.20 மணிக்கு புறப்படும்.

செவ்வாய்க்கிழமை முழுமையாக ரத்தாகும் ரயில்கள்: நெல்லூா்-சூலூா்பேட்டைக்கு செவ்வாய்க்கிழமை காலை 10.15 மணிக்கு இயக்கப்படும் மெமு விரைவு ரயில், சூலூா்பேட்டை-நெல்லூருக்கு காலை 7.45 இயக்கப்படும் மெமு விரைவு ரயில், சூலூா்பேட்டை-மூா் மாா்க்கெட்

வளாகத்துக்கு நண்பகல் 12.35 மணிக்கு இயக்கப்படும் மெமு சிறப்பு ரயில், மூா் மாா்க்கெட் வளாகம்-சூலூா்பேட்டைக்கு அதிகாலை 5.20 மணிக்கு இயக்கப்படும் ரயில் ஆகிய ரயில்கள் ரத்து செய்யப்படவுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.