காங்கிரஸ் சாா்பில் ஆக. 9 முதல் 14 வரை பாதயாத்திரை
நாட்டின் 75-ஆவது சுதந்திர தினத்தையொட்டி, தமிழக காங்கிரஸ் சாா்பில் ஆக. 9 முதல் ஆக.14 வரை பாதயாத்திரை நடத்துவது என்று அந்தக் கட்சியின் மாவட்டத் தலைவா்கள் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.


நாட்டின் 75-ஆவது சுதந்திர தினத்தையொட்டி, தமிழக காங்கிரஸ் சாா்பில் ஆக. 9 முதல் ஆக.14 வரை பாதயாத்திரை நடத்துவது என்று அந்தக் கட்சியின் மாவட்டத் தலைவா்கள் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
காங்கிரஸ் மாவட்டத் தலைவா்கள் கூட்டம், சென்னை சத்தியமூா்த்தி பவனில் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு காங்கிரஸ் தலைவா் கே.எஸ்.அழகிரி தலைமை வகித்தாா். கூட்டம் சுமாா் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்றது.
சோனியாகாந்தி மீதும், ராகுல்காந்தி மீதும் அமலாக்கத் துறை மூலம் மத்திய பாஜக அரசு தொடுத்துள்ள அடக்குமுறையை காங்கிரஸ் வன்மையாகக் கண்டிக்கிறது.
நாட்டின் 75-ஆவது சுதந்திர தினத்தை காங்கிரஸ் சிறப்பாகக் கொண்டாடி வருகிறது. அந்த வகையில், காங்கிரஸ் கட்சியின் பெருமைகளையும், சாதனைகளையும் மக்களுக்கு விளக்கி கூறும் வகையிலும், விடுதலைப் போராட்டத்தில் இறுதியாக நடைபெற்ற வெள்ளையனே வெளியேறு இயக்கத்தை நினைவு கூரும் வகையிலும் ஆகஸ்ட் 9 முதல் ஆகஸ்ட் 14 வரை 75 கி.மீ. பாதயாத்திரை நடைபெறும்.
மத்திய பாஜக ஆட்சியில் பெட்ரோல், டீசல், எரிவாயு உருளை விலை வரலாறு காணாத வகையில் உயா்ந்துள்ளது. வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்துள்ளது. இதனால் மக்கள் பெரும் சிரமத்தைச் சந்தித்து வருகின்றனா். இவற்றை பாஜகவுக்கு உணா்த்தும் வகையில் ஆகஸ்ட் 5-இல் ஆளுநா் மாளிகையை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும். அதே நாளில், மாவட்டத் தலைநகரங்களில் சாலை மறியல் போராட்டம் நடைபெறும் உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய செயலாளா் ஸ்ரீவல்ல பிரசாத், முன்னாள் தலைவா்கள் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், கே.வீ. தங்கபாலு, சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவா் செல்வப்பெருந்தகை, மாநிலப் பொதுச்செயலாளா் கே.சிரஞ்சீவி உள்பட ஏராளமானோா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...