சென்னை ஸ்டான்லி மருத்துவமனை பொறியாளர்கள் பணிநீக்கம்

சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில், மின்தூக்கிகளை சரியாக பராமரிக்காத காரணத்தால் பொறியாளர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை ஸ்டான்லி மருத்துவமனை பொறியாளர்கள் பணிநீக்கம்

சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில், மின்தூக்கிகளை சரியாக பராமரிக்காத காரணத்தால் பொறியாளர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில், மின்தூக்கிகளை சரியாக பராமரிக்காத காரணத்தால் பொறியாளர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் கை அறுவை சிகிச்சைச் சிறப்பு மேற்படிப்பு துவக்கம் மற்றும் புனரமைக்கப்பட்ட நூற்றாண்டு நிர்வாக கட்டட அலுவலகம் திறப்பு விழாவிற்கு, மருத்துவம்-மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் அவர்கள் பங்கேற்க 29.11.2022 அன்று அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு சென்றார்.

மருத்துவம் - மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அவர்களுடன், மருத்துவம்-மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மைச் செயலாளர் முனைவர் பி.செந்தில்குமார், மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் பாலாஜி, வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி, ராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் ஐட்ரீம் மூர்த்தி மற்றும் சிலர் உடன் சென்றுள்ளனர்.

மின்தூக்கியில் செல்லும்போது, மின்தூக்கியை பராமரிக்க வேண்டிய பொறியாளர்களின் கவனக்குறைவாலும், சரிவர பராமரிக்காததாலும் பாதி வழியில் பழுதடைந்து நின்று விட்டது. இது தொடர்பாக மாண்புமிகு அமைச்சர் அவர்கள், மருத்துவமனையில் நோயாளிகளிடம் விசாரித்த வகையில் இது போன்று அடிக்கடி மின்தூக்கி (லிஃப்ட்) பழுதடைந்து விடுகிறது எனத் தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து, இதற்கு பொறுப்பான பொதுப்பணித்துறை உதவிச் செயற்பொறியாளர் டி.சசிந்தரன், மற்றும் உதவிப் பொறியாளர் வி.கலைவாணி ஆகிய இருவரையும் உடனடியாக தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், முதன்மைத் தலைமைப் பொறியாளர் பொதுப்பணித்துறை அவர்கள், இனிவரும் காலங்களில் இதுபோன்று நிகழ்வுகளை தவிர்க்கும் பொருட்டு, விரிவான சுற்றறிக்கை ஒன்றினை, 25.11.2022 அன்று அனைத்து மின் பொறியாளர்களுக்கும் அனுப்பியுள்ளார். 

அதில், மருத்துவமனைகளில் உள்ள மின்தூக்கிகள் (Lifts) மற்றும் இதர மின் சாதனங்கள் சரியாக இயங்குவதை சம்பந்தப்பட்ட மருத்துவக் கல்லூரி முதல்வர்களுடன் இணைந்து பணிகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் இச்சுற்றறிக்கையில் அறிவுறுத்தியுள்ளார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com