பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

உக்ரைனிலிருந்து திரும்பிய கொளத்தூர் மாணவிகள்

உக்ரைனில் சிக்கித் தவித்த சென்னை கொளத்தூரைச் சேர்ந்த மருத்துவ மாணவிகள்  துபாய் வந்தடைந்துள்ளனர்.

News image
ஷார்ஜா விமானநிலையம் வந்தடைந்த மாணவிகள் ஸ்ரீலேகா மற்றும் லைகா
Updated On :10 மார்ச் 2022, 2:29 pm

DIN

அமீரக தமிழ் தொழில் முனைவோர் மற்றும் திறனாளர் கூட்டமைப்பு  சார்பில் தமிழக அரசு எடுத்த  துரித நடவடிக்கையால் உக்ரைனில் சிக்கித் தவித்த சென்னை கொளத்தூரைச் சேர்ந்த மருத்துவ மாணவிகள்  துபாய் வந்தடைந்துள்ளனர்.

சென்னை கொளத்தூரைச் சேர்ந்த மருத்துவ மாணவி ஸ்ரீலேகா. உக்ரைனில் நடைபெற்று வரும் போரால் பாதிப்படைந்த இவர், தமிழகம் திரும்ப முடியாமல் தவித்து  வந்தார். அவரது பெற்றோர் அமீரக தமிழ் தொழில் முனைவோர் மற்றும் திறனாளர் கூட்டமைப்பை தொடர்பு கொண்டு மகளை மீட்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டனர்.

அதனடிப்படையில்  சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தானை தொடர்பு கொண்ட கூட்டமைப்பினர்,  ஸ்ரீலேகாவை மீட்டு தமிழகம் அழைத்து வர நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டனர்.

தமிழக அரசின் துரித நடவடிக்கையால் விமானம் மூலம் மாணவி ஸ்ரீலேகா மற்றும் அவரது தோழி லைகா ஆகிய இருவரும்  துபாய் விமான நிலையத்துக்கு அழைத்து வரப்பட்டனர். அவர்களுக்கு  அமீரக தமிழ் தொழில் முனைவோர் மற்றும் திறனாளர் கூட்டமைப்பின் தலைவர் டாக்டர் பால் பிரபாகர், சர்வதேச ஆலோசகர் ஷா நவாஷ்கான், சட்ட ஆலோசகர் ஷாநவாஷ் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

ஷார்ஜா விமான நிலையம் வந்தடைந்த மாணவிகள், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் மற்றும்  அமீரக தமிழ் தொழில் முனைவோர் மற்றும் திறனாளர் கூட்டமைப்பு நிர்வாகிகளுக்கு  நன்றி தெரிவித்துக் கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.