புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

போக்குவரத்து ஊழியர்களுக்கு 2% முதல் 5% வரை ஊதியத்தை உயர்த்த நடவடிக்கை: அமைச்சர் சிவசங்கர்

குரோம்பேட்டையில் உள்ள போக்குவரத்து பயிற்சி நிலைய வளாகத்தில் ஊதிய உயர்வு தொடர்பாக போக்குவரத்துத் துறை அமைச்சர்

News image

கோப்புப்படம்

Updated On :12 மே 2022, 12:51 pm

DIN

சென்னை: குரோம்பேட்டையில் உள்ள போக்குவரத்து பயிற்சி நிலைய வளாகத்தில் ஊதிய உயர்வு தொடர்பாக போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. பேச்சுவார்த்தையில் தொழிற்சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

பேச்சுவார்த்தைக்குப் பிறகு செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ் சிவசங்கர் கூறியதாவது:

8%  ஊதிய உயா்வு வழங்க தொழிற்சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அரசு 5% வரை ஊதிய ஊயா்வு வழங்க அரசு தயாராக உள்ளது. இதுகுறித்து நிதித்துறை அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து 3 வாரங்களில் முடிவு எடுக்கப்படும்.

போக்குவரத்துத் துறையில் பணியின்போது இறந்த ஊழியர்களின் வாரிசுகளுக்கு பணி ஆணை வழங்கப்படும்.

மகளிர் இலவச பயணம் செய்யும் பேருந்துகளில் பணிபுரியும் தொழிலாளா்களுக்கு படித்தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்

பணி ஓய்வுபெற்ற போக்குவரத்து தொழிலாளா்களுக்கு மருத்துவ காப்பீடு வழங்க ஏற்பாடு செய்யப்படும். என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.