சென்னை: சென்னை தீவுத்திடலில் உணவுத் திருவிழா நடத்தப்படும் என்று உணவுப் பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.
உணவுப் பாதுகாப்புத் துறை சார்பில் சென்னை தீவுத்திடலில் ஆகஸ்ட் 12, 13, 14 ஆகிய 3 நாட்கள் உணவுப் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் உணவுத் திருவிழா நடத்தப்படுகிறது.
சிங்கார சென்னையில் உணவுத் திருவிழா 2022 என்ற பெயரில் நடைபெறுகிறது. 3 நாட்கள் நடைபெறும் இந்த உணவுத் திருவிழாவில் பாரம்பரிய உணவு வகைகளை வெளிப்படுத்தும் விதமாக 150 அரங்குகள் அமைக்கப்பட உள்ளது.
உணவு வீணாவதைத் தடுக்க வேண்டிய வழிமுறைகள், எந்த உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும் போன்றவற்றை குறித்து விளக்கும் வகையில் உணவுத் திருவிழா நடைபெற உள்ளது. பாரம்பரிய உணவு வகைகள், உணவு சார்ந்த போட்டிகள், கலை நிகழ்ச்சிகள் போன்றவை நடைபெற உள்ளது.
இந்த உணவுத் திருவிழாவில் திரைக்கலைஞர்கள், பிரபலங்கள் பலர் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதையும் படிக்க: ஏர் இந்தியா விமானிகளுக்கு மகிழ்ச்சி தரும் செய்தி!
ஆகஸ்ட் 14 ஆம் தேதி காலை 7 மணி அளவில் உணவுப் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு நடைப்பயணம் மேற்கொள்ளப்பட உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

டெபாசிட்டுக்கான வட்டி விகிதத்தை உயர்த்திய சவுத் இந்தியன் வங்கி!

சனந்த் நடிக்கும் ஹார்ட்டின் பட டிரைலர் வெளியீடு!

விஜய் அன்பளிப்பு! ரிக்ஷா தொழிலாளர்களுக்கு இலவச மழை கோட்டுகள்!

அர்ஷ்தீப் சிங்குக்குப் பதிலாக ஹர்ஷித் ராணா களமிறங்குகிறாரா?
விடியோக்கள்

பொங்கல் வெளியீடாக சேயோன்! | Dinamani Cinema Update | Dinamani Talkies

மாநிலக் கட்சிகளை முறையாக ஒருங்கிணைக்கிறதா காங்கிரஸ்?: ப. சிதம்பரம் Exclusive | P Chidambaram |

தீர்மானத்திற்கு கர்நாடக அரசு பணியாது! முன்னாள் அமைச்சர் துரைமுருகன் | DMK | TVK



