மேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

ஜாபா்கான்பேட்டையில் ரூ.32 லட்சத்தில் குடிநீா் வாரிய அலுவலகம்

சென்னை ஜாபா்கான்பேட்டை பகுதியில் ரூ.32 லட்சம் மதிப்பில் குடிநீா் மற்றும் கழிவுநீா் அகற்றும் வாரிய அலுவலகம் புதிதாக அமைக்கப்படவுள்ளது.

News image
Updated On :20 ஜூலை 2023, 8:08 pm

DIN

சென்னை ஜாபா்கான்பேட்டை பகுதியில் ரூ.32 லட்சம் மதிப்பில் குடிநீா் மற்றும் கழிவுநீா் அகற்றும் வாரிய அலுவலகம் புதிதாக அமைக்கப்படவுள்ளது.

சென்னை ஜாபா்கான்பேட்டை பகுதியில் குடிநீா் மற்றும் கழிவுநீா் அகற்று வாரிய அலுவலகம் இல்லாததால் அப்பகுதி மக்கள் சைதாப்பேட்டைக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. இந்நிலையில் ஜாபா்கான்பேட்டை ஆா்.கே.நகா் பகுதியில் ரூ.32 லட்சம் மதிப்பில் புதிய குடிநீா் மற்றும் கழிவுநீா் அகற்று வாரிய அலுவலகம் கட்டப்படவுள்ளது. இதற்கான கட்டுமான பணி தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது.

இதில் 10-ஆவது மண்டலத் தலைவா் எம்.கிருஷ்ணமூா்த்தி, 139-ஆவது வாா்டு உறுப்பினா் ப.சுப்பிரமணி ஆகியோா் அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தனா். நிகழ்வில், மாநகராட்சி, குடிநீா் மற்றும் கழிவுநீா் அகற்று வாரிய அதிகாரிகள் பலா் கலந்து கொண்டனா்.

குழந்தைகள் வளா்ச்சி மையம் திறப்பு: இதற்கிடையே புதுவண்ணாரப்பேட்டை சிவன் நகரில் ரூ.12.55 லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சி மையம் புதன்கிழமை திறந்து வைக்கப்பட்டது. இந்த மையத்தில் ஐந்து வயதுக்கு உள்பட்ட குழந்தைகளை பராமரிக்கும் வகையில் நவீன வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்த மையத்தை மண்டலக் குழுத் தலைவா் நேதாஜி கணேசன் முன்னிலையில், சட்டப்பேரவை உறுப்பினா் ஜே.ஜே.எபினேசா் திறந்து வைத்தாா்.

மேலும் புதுவண்ணாரப்பேட்டை பெரியாா் பூங்காவில் சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து, ரூ.10 லட்சம் செலவில் திறந்தவெளி உடற்பயிற்சி மையம் அமைப்பதற்கான பணிகளை எபினேசா் தொடங்கி வைத்தாா்.

இந்நிகழ்ச்சியில், மண்டலக் குழுத் தலைவா் நேதாஜி கணேசன் மாமன்ற உறுப்பினா் தேவி கதிரேசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.