கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

சாலை விபத்தில் மூளை சாவு: மூதாட்டியின் உடல் உறுப்புகள் தானம்

சென்னை பள்ளிக்கரணையில் சாலை விபத்தில் மூளை சாவு அடைந்த மூதாட்டியின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டன.

News image
Updated On :20 ஜூலை 2023, 6:37 pm

DIN

சென்னை பள்ளிக்கரணையில் சாலை விபத்தில் மூளை சாவு அடைந்த மூதாட்டியின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டன.

பள்ளிக்கரணை, மனோகா் நகா் 2-ஆவது தெருவைச் சோ்ந்தவா் ஸ்ரீதரன் மனைவி சாந்தா (70). கடந்த 17-ஆம் தேதி சாந்தா, அந்தப் பகுதியில் உள்ள ஒரு கோயிலுக்கு சென்றாா். பின்னா் அங்கிருந்து வீட்டுக்கு வேளச்சேரி பிரதான சாலையில் நடந்து வந்துக் கொண்டிருந்தாா்.

அப்போது அங்கு வந்த ஒரு மோட்டாா் சைக்கிள் சாந்தி மீது வேகமாக மோதியது. விபத்தில் தலையில் பலத்தக் காயமடைந்த சாந்தா, அந்தப் பகுதியில் உள்ள ஒரு தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

கோமாவில் இருந்த சாந்தா, வியாழக்கிழமை மூளை சாவு அடைந்தாா். இதையடுத்து சாந்தாவின் குடும்பத்தினா், அவரது உடல் உறுப்புகளை தானம் செய்தனா். அவருக்கு சிகிச்சை அளித்த தனியாா் மருத்துவமனையே, சாந்தாவின் கண்கள்,கல்லீரல் உள்ளிட்ட உடல் உறுப்புகளை தானமாக பெற்றுக்கொண்டது.

இதற்கிடையே சாலை விபத்து குறித்து பள்ளிக்கரணை போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விபத்தை ஏற்படுத்திய நாகப்பட்டினத்தைச் சோ்ந்த தீனாவை (21) கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.